சிவராசா அனோஜன் விடுதலை: ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளருடன் சாணக்கியன் சந்திப்பு!

arvloshan.com

சவூதி அரேபியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனின் விடுதலையை உறுதிசெய்வதற்காக சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவைத் திரட்டுவது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் (ACJU) பொதுச்செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூராமித் , சிவராசா அனோஜனின் விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகத் தமக்கு உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபிய ராஜ்யத்தின் 96ஆவது தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில், இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வரவேற்பு உபசார நிகழ்வில் கலந்துகொண்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளரைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் தற்காலிக தூதுவர் யாசிர் அப்துல்ரஹ்மான் அல்-ஹஸ்மி விடுத்த அழைப்பின் பேரிலேயே சாணக்கியன் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான முயற்சியில் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு சிறிய ஆதரவும் மிகவும் தீர்க்கமானது என்றும், அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

...

arvoshan.com

ஷிரான் பாசிக்கின் தந்தை அக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

...

arvoshan.com

இரத்மலானை மற்றும் கல்கிசையில் கருபவளங்களுடன் இருவர் கைது

...

arvoshan.com

அனோஜன் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் மக்கள் பேரணி!

...

arvoshan.com

22 ஆம் திருத்தம்: தவறான செய்தி வெளியீடு; ஊடகங்கள் திருத்தம் செய்ய வேண்டும் - பிமல் ரத்நாயக்க

...

arvoshan.com

நீதிமன்ற அலுவலருக்கு லஞ்சம் வழங்க முயற்சி: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி விளக்கமறியலில்!

...

arvoshan.com

காலி, கண்டி, நுவரெலியாவில் நிலச்சரிவு அபாயம்: ‘சிவப்பு எச்சரிக்கை’ வெளியீடு!

...

arvoshan.com

எல்ல உணவகத்திற்கு ரூ. 10 இலட்சம் அபராதம்: அதிக விலைக்குக் குடிநீர் விற்பனை

...

arvoshan.com

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: FSP கடும் எதிர்ப்பு!

...

arvoshan.com

நாட்டின் 20 வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனம்: அரசாங்கம் நடவடிக்கை

...

arvoshan.com

22ஆவது திருத்தம் 'அரசனின் புதிய ஆடைகள்' போன்றது: சஜித் சாடல்

...

arvoshan.com

அரசுக்கு 4.79 மில்லியன் நஷ்டம்: முன்னாள் பௌத்த சாசன அமைச்சுச் செயலாளர் கைது!

...

arvoshan.com

நவம்பர் 1 முதல் முக்கிய சேவைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

...