கொபேகனே பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு – ஐந்து கிராமவாசிகள் கைது!

arvloshan.com

இலங்கையின் கொபேகனே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, பொலிஸ் காவலில் இருந்தபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த ஐந்து கிராமவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் குறித்த சந்தேகநபர், கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி கொபேகனே, பெத்தேகம பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு கொபேகனே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இரண்டு நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்த ஐந்து கிராமவாசிகளையும் கொபேகனே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்ட கிராமவாசிகளின் உறவினர்கள் இந்தக் கைது நடவடிக்கை தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சந்தேகநபரைப் பிடித்தபோது அவருக்கு எவ்வித காயங்களும் இருக்கவில்லை என்றும், அவரைப் பிடித்த பின்னர் மரமொன்றில் கட்டிவைத்திருந்த போதிலும், ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, அவர் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பிடிக்கப்பட்டபோது காயமடைந்திருந்தால், அவர் ஏன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த சந்தேகநபர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறி, இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த நபரைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் கிராமவாசிகளுக்கு முன்னதாக அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் மேலதிக விசாரணைகள் அவசியம் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027 முதல் இஸ்ரேல் வேலைவாய்ப்புகள் அரசாங்க ஒப்பந்தங்கள் ஊடாக மட்டுமே!

...

arvoshan.com

மூச்சுத்திணறல் அபாயம் – கொழும்பில் 12,000 கோலி சோடா போத்தல்கள் பறிமுதல்!

...

arvoshan.com

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

...

arvoshan.com

800 படுக்கைகள் இருந்தும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத KDU மருத்துவமனை – COPE அதிருப்தி!

...

arvoshan.com

GSP+ வரிச்சலுகையைப் பாதுகாக்க சட்டமூலங்களை மறுபரிசீலனை செய்யுமாறு வர்த்தக சம்மேளனம் கோரிக்கை

...

arvoshan.com

இலங்கையில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு!

...

arvoshan.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்: GSP+ சலுகையை இலங்கை இழக்க நேரிடும் – சஜித் எச்சரிக்கை

...

arvoshan.com

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய வேலைநிறுத்தம்!

...

arvoshan.com

கடும் மின்னல் தாக்கம் குறித்து 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டுடன் பொறுப்புகளும் அதிகரிக்கின்றன – பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய வேலைத்திட்டம்

...

arvoshan.com

தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு ஏக்கருக்கு ரூ. 10 இலட்சம் வரை காப்புறுதி!

...

arvoshan.com

ரூ.454 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன், எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது!

...

arvoshan.com

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: மனித உரிமை மீறல்கள் குறித்து HRW எச்சரிக்கை!

...

arvoshan.com

தங்கக் கடத்தல் வழக்கில் இலங்கையருக்கு விடுதலை - ஒரு வருட சிறைத்தண்டனைக்குப் பின்னர் தீர்ப்பு!

...