குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட ஆபரணம் சர்ச்சை: கரீனா கபூருக்கு சட்ட அறிவிப்பு!

arvloshan.com

பொலிவுட் நடிகை கரீனா கபூர் கான் அணிந்திருந்த ஆபரணத்தில் குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவருக்கும் அவரது ஆடை வடிவமைப்பாளரான ரியா கபூருக்கும் சட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் இந்த சட்ட அறிவிப்பை அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கரீனா கபூர் அணிந்திருந்த பாரம்பரிய ஆடை மற்றும் ஆபரணங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணத்தில் இஸ்லாமியர்களால் புனிதமாகக் கருதப்படும் குர்ஆனின் ஆயத்துல் குர்ஸி வசனம் பொறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், புனித குர்ஆன் வசனங்களை அலங்காரப் பொருளாகவும் நாகரிக வெளிப்பாட்டுக்காகவும் பயன்படுத்துவது மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும் என அப்பாஸ் ஹபீஸ் தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், கரீனா கபூர் மற்றும் ரியா கபூர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சட்ட அறிவிப்பில், சர்ச்சைக்குரிய புகைப்படங்களை உடனடியாக சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்குவதுடன், நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

இந்த நடவடிக்கையை முஸ்லிம் என்ற தனிப்பட்ட அடிப்படையிலேயே முன்னெடுத்துள்ளதாகவும், இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் நீக்கப்பட்டு மன்னிப்புக் கோரப்படாவிட்டால், பொலிஸார் அல்லது நீதிமன்றத்தின் ஊடாக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், தீபாவளியன்று வடிவமைப்பாளர் புனித் பலானா தயாரித்த வெள்ளியிலான கஃப்தான் ஆடையையும் அதற்குப் பொருத்தமான தலைப்பாகையையும் அணிந்திருந்த கரீனா கபூரின் புகைப்படங்களை ரியா கபூர் பகிர்ந்திருந்தார்.

அத்துடன், போபால் நவாபுக்குச் சொந்தமான சுமார் 200 ஆண்டுகள் பழமையான கல்கி எனப்படும் தலை அலங்கார ஆபரணத்தையும், போபால் பேகத்துக்குச் சொந்தமான 30 கரட் மரகதக் கல் பதிக்கப்பட்ட மாலையையும் கரீனா அணிந்திருந்தார்.

குறித்த மரகதக் கல்லிலேயே ஆயத்துல் குர்ஸி வசனம் செதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆபரணங்கள் போபால் அரச குடும்பத்தின் பாரம்பரியச் சொத்துகளாகும். கரீனாவின் கணவர் சைப் அலிகான் குடும்பத்தின் வழியாக அவர்களுக்குக் கிடைத்துள்ளன. சைப்பின் பாட்டியான சஜிதா சுல்தான், போபாலின் கடைசி ஆட்சியாளராக இருந்த நவாபின் மகளாவார்.

எவ்வாறாயினும், இந்தச் சர்ச்சை தொடர்பில் கரீனா கபூர் அல்லது ரியா கபூர் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்தப் பதிலும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், நடிகை கரீனா கபூர் கடைசியாக மேக்னா குல்சார் இயக்கத்தில் வெளியான 'தாய்ரா' (Daayra - 2026) திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரனும் நடித்திருந்தார்.

அடுத்ததாக, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' (King) திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியொன்றில் கரீனா கபூர் தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமணப் புகைப்படங்கள்

...

arvoshan.com

‘சீன்’ படத்தின் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா – ஜோதிகா நெகிழ்ச்சிப் பதிவு

...

arvoshan.com

காதலர் ராஜவேல் ராஜை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்!

...

arvoshan.com

‘டேர் டெவில்’ படப்பிடிப்பில் நவம்பர் 12ஆம் தேதி பங்கேற்கும் அஜித்

...

arvoshan.com

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு ஆரம்பம் – முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் – நவம்பர் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்!

...

arvoshan.com

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணையும் ஸ்ரீலீலா – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

...

arvoshan.com

இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 5 யூடியூபர்கள் யார்? மாத வருமானம் பல கோடிகளாம்!

...

arvoshan.com

புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு வாரம் தினமும் 6 காட்சிகள் – முதல்வர் விஜய் உத்தரவு!

...

arvoshan.com

தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைத்த ‘ஜெயிலர் 2’: ரூ.800 கோடியைக் கடந்த வசூல்!

...

arvoshan.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் இணையும் நடிகர் பார்த்திபன்!

...

arvoshan.com

‘ஓம்’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த தனுஷுக்கு சூர்யா நன்றி!

...

arvoshan.com

குற்றப் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படத்தில் பிரேம்ஜி அமரன்!

...

arvoshan.com

ஷாருக்கானின் ‘King’ திரைப்படம் – வெளிநாட்டு விநியோக உரிமை ரூ.175 கோடிக்கு விற்பனை!

...

arvoshan.com

பழங்குடி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அரிகொம்பன்’ திரைப்படம்

...