கனமழை தொடரும் நிலையில் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

arvloshan.com

நாட்டில் நிலவும் தொடர் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, கிரிந்தி ஓயா மற்றும் வளவே ஆற்றுப் படுகைகளில் அமைந்துள்ள பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத், நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, கிரிந்தி ஓயா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் தலா நான்கு அங்குலமும், மேலும் நான்கு வான்கதவுகள் தலா ஆறு அங்குலமும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் விநாடிக்கு சுமார் 3,000 கனஅடி நீர் கிரிந்தி ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது.

அதேவேளை, கிரிந்தி ஓயா ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள அலிகோட்ட ஆர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

மேலும், மாவு ஆர நீர்த்தேக்கமும் வான்பாய்ந்து வருவதுடன், விநாடிக்கு 1,500 கனஅடிக்கும் அதிகமான நீர் மாவு ஆற்றில் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நீர் வெளியேற்றம் காரணமாக கிரிந்தி ஓயா மற்றும் வளவே ஆற்றுப் படுகைகளின் கீழ்ப்பகுதிகளில் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக வளவே ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் ஆற்றின் நீர்மட்ட உயர்வு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் ஆறுகளின் நீர்மட்ட மாற்றங்களைத் தொடர்ந்து அவதானிப்பதுடன், வான்கதவுகள் திறப்பு மற்றும் நீர்மட்ட உயர்வு தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் வெளியிடும் அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!

...

arvoshan.com

வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!

...

arvoshan.com

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி

...

arvoshan.com

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!

...

arvoshan.com

மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி மனு தாக்கல்!

...

arvoshan.com

“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி

...

arvoshan.com

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு 5,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலங்களில் பழச் செய்கை – அரசாங்கம் புதிய திட்டம்

...

arvoshan.com

அநுராதபுரத்தில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்தில் மோதல்!

...

arvoshan.com

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு பொலிஸார் அழைப்பாணை

...

arvoshan.com

இலங்கையில் அதிக வரி விதிப்புகள் தொடர வேண்டியதன் அவசியம் என்ன? – பொருளாதார நிபுணர் விளக்கம்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தயாராகும் எதிர்க்கட்சி – விசேட கலந்துரையாடல்

...

arvoshan.com

அரிசி நுகர்வை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் – அரச ஊழியர்களுக்கு லால் காந்த அறிவுரை

...

arvoshan.com

பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தோல்வி – அரச நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டத்தில்: ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

ஹோட்டல்களுக்கு சட்டவிரோதமாக வன இறைச்சி விநியோகம்; ஐந்து துப்பாக்கிகள், 100-க்கும் மேற்பட்ட பொறிகளுடன் சந்தேகநபர் கைது

...

arvoshan.com

நெதர்லாந்து வேலைவாய்ப்பு விசா தொடர்பில் மோசடி – பொதுமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை

...