கணவரைக் கொன்று பீப்பாயில் மறைத்த மனைவி, கள்ளக்காதலன் குற்றவாளிகள்: மீரட் நீதிமன்றம் தீர்ப்பு!

arvloshan.com

காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் குத்திக் கொலை செய்து, அவரது உடலை நீல நிறப் பீப்பாயில் (Blue Drum) வைத்து சிமெண்ட் கலவையால் மூடி மறைத்த வழக்கில், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என மீரட் (Meerut) மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த சவுரவ் ராஜ்புத் என்பவரின் மனைவி முஸ்கான் ரஸ்தோகி. இவருக்கும் சஹில் சுக்லா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இவர்களது காதலுக்கு சவுரவ் ராஜ்புத் இடையூறாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக, கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முஸ்கானும், அவரது கள்ளக்காதலன் சஹிலும் இணைந்து சவுரவை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர், அவரது உடலை ஒரு பெரிய நீல நிறப் பேரணியில் போட்டு, அது வெளியே தெரியாதவாறு மணல் மற்றும் சிமெண்ட் காங்கிரீட் கலவையைக் ஊற்றி மூடினர்.

தொடர்ந்து, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மற்றும் பீப்பாயை மறைத்து வைத்துவிட்டு, இருவரும் இமாச்சலப் பிரதேசத்திற்குத் தப்பியோடினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மீரட் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய சஹில் மற்றும் முஸ்கான் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது. மொத்தம் 126 முறை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது, 22 சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், மீரட் மாவட்ட நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா வழக்கில் தீர்ப்பளித்தார். கணவரைக் கொலை செய்து, அவரது உடலை பேரணியில் மறைத்து வைத்த குற்றத்திற்காக மனைவி முஸ்கான் மற்றும் அவரது கள்ளக்காதலன் சஹில் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

மேலும், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் பேரணியை மறைத்த குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கதர் ஆடைகளையும் உள்ளூர் பொருட்களையும் வாங்குமாறு தமிழக முதல்வர் விஜய் வேண்டுகோள்

...

arvoshan.com

‘ஃப்ளை துபாய்’ விமானி ஸ்மித் மச்சாருக்கு குஜராத் அரசின் உயரிய விருது: குஜராத் முதல்வர் அறிவிப்பு

...

arvoshan.com

“தி.மு.க-வை எதிர்ப்பது நான் மட்டுமே” - தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ஆவேச உரை

...

arvoshan.com

அரபிக்கடலில் 3,000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்: 5 பாகிஸ்தானியர்கள் கைது!

...

arvoshan.com

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!

...

arvoshan.com

2 நாளில் 9 கொலைகள்: முதல்வர் விஜய்யை சாடும் உதயநிதி, கனிமொழி!

...

arvoshan.com

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி தலைவர்கள் அக். 1-இல் தீவிரப் பிரச்சாரம்!

...

arvoshan.com

மேற்கு வங்கத்திலும் காலடி பதித்தது தவெக: சமூகப் பணிகள் மூலம் மக்களைக் கவர திட்டம்!

...

arvoshan.com

மதுரையில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட 'ரோடு ஷோ': கடுமையான வெயிலில் 10 பேர் மயக்கம்!

...

arvoshan.com

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை: 56 பேர் பலி, 1000 வீடுகள் சேதம்!

...

arvoshan.com

இந்தியாவில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் வீழ்ந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

...

arvoshan.com

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் விஜய்

...

arvoshan.com

சூரியசக்தித் துறையில் 16 பில்லியன் $ முதலீடு: இந்தியாவிற்கு அமெரிக்கா விதிக்கும் புதிய வரிச் சவால்!

...

arvoshan.com

‘விஜய்யை சாடிய ஸ்டாலின்’: முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை சுயபரிசோதனை செய்ய கோரிக்கை!

...

arvoshan.com

ஜெம் வீரமணி வழக்கைப் பூசிமெழுகிய திமுக: மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாடல்!

...