ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராகக் களமிறங்கும் மித்துன் மாணிக்கம் – ‘ஃபேமிலி பாய்’ டிசம்பர் 11இல் வெளியீடு
நடிகர் மித்துன் மாணிக்கம் எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
காணாமல் போன உழவு மாடுகளைத் தேடி அலையும் விவசாயத் தொழிலாளி ஒருவரின் குடும்பத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. நடிகர் சூர்யா தயாரித்த இந்தப் படத்தின் மூலம் மித்துன் மாணிக்கம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் கதாநாயகனாகக் களமிறங்கியுள்ளதுடன், இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காணாமல் போன ஒரு பொருளைத் தேடி கதாநாயகன் அலையும் ஒரே நாளில் இடம்பெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் டிசம்பர் 11ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.