எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான முகாமைத்துவ ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல், இதுவரை 528 பில்லியன் ரூபா ஒட்டுமொத்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று (நவம்பர் 12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பிரச்சினை ஒன்றைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்ததாகவும், அதன் பின்னரே ஸ்ரீலங்கன் விமான சேவை இவ்வாறான பாரிய நட்டத்தைச் சந்தித்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எமிரேட்ஸ் நிறுவனத்துடனான 10 ஆண்டுகால முகாமைத்துவ ஒப்பந்தம் 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் விமான சேவையின் முகாமைத்துவப் பொறுப்பை இலங்கை அரசாங்கம் மீண்டும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.