உத்தர பிரதேசத்தில் தொடர் மழை: 56 பேர் பலி, 1000 வீடுகள் சேதம்!

arvloshan.com

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 60 மணி நேரமாக இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீதாபூர், லக்கிம்பூர் கெரி, பலராம்பூர், கோரக்பூர், அயோத்தி உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெய்த மழை, 60 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால் அம்மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை, மின்னல் மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக சீதாபூர் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்தமை, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்தமை உள்ளிட்ட சம்பவங்களில் 46 பேர் பலத்த காயமடைந்துள்ளதுடன், 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. அத்துடன் 107 கால்நடைகளும் பலியாகியுள்ளன.

மழையின் தீவிரத்தால் கங்கை, யமுனை, காக்ரா, ராப்தி, கண்டக், சோன் மற்றும் ஜிக்கோ உள்ளிட்ட முதன்மை ஆறுகளில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது. இதன் காரணமாக 32 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் லக்னோ உட்பட பல முக்கிய நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் பெரும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எல் நினோ (El Niño) காரணியின் தாக்கம் காரணமாகவே உத்தர பிரதேசத்தில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்து வருவதாக வானிலை அவதான நிலையங்கள் தெரிவித்துள்ளதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை 73% முதல் 90% வரை மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (NDRF / SDRF) இணைந்து இரவு பகலாக தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மதுரையில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட 'ரோடு ஷோ': கடுமையான வெயிலில் 10 பேர் மயக்கம்!

...

arvoshan.com

இந்தியாவில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் வீழ்ந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

...

arvoshan.com

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் விஜய்

...

arvoshan.com

சூரியசக்தித் துறையில் 16 பில்லியன் $ முதலீடு: இந்தியாவிற்கு அமெரிக்கா விதிக்கும் புதிய வரிச் சவால்!

...

arvoshan.com

‘விஜய்யை சாடிய ஸ்டாலின்’: முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை சுயபரிசோதனை செய்ய கோரிக்கை!

...

arvoshan.com

ஜெம் வீரமணி வழக்கைப் பூசிமெழுகிய திமுக: மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாடல்!

...

arvoshan.com

ஜப்பானுக்குப் போட்டியாக இந்தியாவின் புதிய அதிவேக 'B35' புல்லட் ரயில்!

...

arvoshan.com

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தொழுப்பேட்டில் நாளை முதல்வர் விஜய் தீவிரப் பிரச்சாரம்!

...

arvoshan.com

நொய்டாவில் ஓடும் பேருந்தில் தீ விபத்து: பெண் உட்பட 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு

...

arvoshan.com

திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.29 கோடி உண்டியல் வருமானம்; 33 லட்சம் லட்டுகள் விற்பனை!

...

arvoshan.com

ரூ.10,000 சம்பளப் பிரச்சினை: சூரத்தில் ரூ.24 கோடி ஆடைகள் தீக்கிரை!

...

arvoshan.com

தமிழக மீனவர் படகுகள் அழிப்பு: மத்திய அரசுக்கு மீனவர் காங்கிரஸ் கண்டனம்!

...

arvoshan.com

சபரிமலையில் அரவணைத் தட்டுப்பாடு: கேரள அரசு - தேவஸ்தான வாரியம் இடையே மோதல்

...

arvoshan.com

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதலமைச்சர் விஜய்!

...

arvoshan.com

“முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கு பாடம் புகட்டும் வாய்ப்பே இடைத்தேர்தல்...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

...