இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு அரச நிதி பற்றிய குழு அனுமதி

arvloshan.com

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கு அரச நிதி பற்றிய குழு (COPF) தனது அனுமதியை வழங்கியுள்ளது.

பாராளுமன்றத்தில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற அரச நிதி பற்றிய குழுவின் கூட்டத்தின் போதே இம்மதிப்பீடுகள் விரிவாக ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இக்கலந்துரையாடலில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, நிதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின் நிதி மற்றும் செயல்பாட்டுச் சுதந்திரம், நிதி அமைப்பு மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. அத்துடன், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்து அவதானம் செலுத்திய குழு, தேசிய வரவு செலவுத் திட்டச் செயல்பாடுகளில் எவ்வித காலதாமதமும் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, எதிர்வரும் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 30ஆம் திகதிக்குள் குறித்த மதிப்பீடுகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது.

மேலும், ஆணைக்குழுவின் செயல்பாடுகளைப் பாதிக்கும் வாகனக் கொள்வனவு மற்றும் குத்தகை , பிரதேச செயலகங்களுக்கான கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தல் மற்றும் உத்தியோகபூர்வ கடமைகளுக்கான வெளிநாட்டுப் பயணங்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் மற்றும் நாட்டின் ஊழல் எதிர்ப்புச் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்புகளுக்கு அமைவாக, ஆணைக்குழு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வரும் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 971 புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யவும், 23 பிராந்திய அலுவலகங்களை நிறுவவும் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் , சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்த வேண்டிய கடமைப்பாடுடைய சுமார் 34,000 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து தாமதக் கட்டணங்களை அறவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இவ்வாறு வசூலிக்கப்படும் அபராதத் தொகைகள் ஆணைக்குழுவின் நிதியத்தில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பில் வரி எதிர்ப்புப் போராட்டம்: 6 பேர் கைது

...

arvoshan.com

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், இருவர் கைது

...

arvoshan.com

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் களுத்துறையில் கைது

...

arvoshan.com

உஸ்பெகிஸ்தான் பெண்ணைப் பாலியல் தொழிலில் தள்ளிய முச்சக்கர வண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை!

...

arvoshan.com

மருந்தகங்கள் ஊடாக போதை மாத்திரைகள் விற்பனை? – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அதிர்ச்சித் தகவல்

...

arvoshan.com

கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்: வரிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தல்!

...

arvoshan.com

பொரளையில் எதிர்ப்பு பேரணி: கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்!

...

arvoshan.com

நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி திட்டம் முடங்கும் அபாயம்: புதிய சட்டத் திருத்தத்திற்கு GMOA எதிர்ப்பு

...

arvoshan.com

நச்சு இரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களைக் கண்டறிவது எப்படி? நிபுணர் விளக்கம்

...

arvoshan.com

இலங்கையின் வேலையின்மை விகிதம் 2026 இரண்டாம் காலாண்டில் 4 சதவீதமாக அதிகரிப்பு

...

arvoshan.com

மக்காச்சோள இறக்குமதியில் தாமதம்: பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை விலைகள் உயரும் அபாயம்!

...

arvoshan.com

சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த 'பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அறக்கட்டளை' உருவாக்கம்

...

arvoshan.com

போதைப்பொருள் கடத்தல்: நீர்கொழும்பில் ரூ. 44.5 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்!

...

arvoshan.com

இளம் அரசியல்வாதி கனிஷ்க சேனாநாயக்க காலமானார்!

...

arvoshan.com

பேராதனை கருப்பு பாலத்திற்கு இணையாக புதிய புகையிரதப் பாலம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

...