இலங்கையின் நீர் விநியோகம் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு 300 மில்லியன் டொலர்களை ஒதுக்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

arvloshan.com

இலங்கையின் நீர் விநியோகம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய திட்டங்களுக்காக 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது.

இதன்படி, காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய நிலையான நீர் விநியோகம் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் ஊடாக மேல் மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் சுமார் 250,000 மக்களுக்கான கழிவுநீர் அகற்றல் மற்றும் சுகாதார வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

இதன் கீழ் கொழும்பு மற்றும் லுணுகம்வெஹெர பகுதிகளில் காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் கடத்தல் மற்றும் விநியோகக் கட்டமைப்புகள், நீர்த்தேக்கங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவுநீர் வலையமைப்புகள் மற்றும் நீரிறைக்கும் நிலையங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

நீர் இழப்புகளைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவித்தல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) செயற்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் நீர்த் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகியவையும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

இதற்கிடையில், நீர் வழங்கல் மற்றும் சுகாதார மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

நீர்வள முகாமைத்துவம், சுகாதார வசதிகள், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்புடைய கட்டமைப்புகளை உருவாக்குதல், நீர்க்கட்டண முறைமையை மேம்படுத்துதல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான நீர் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது என இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் ஷனன் கவ்லின் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவிகள் மூலம் நீர்த் துறையின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், சேவை வழங்கலை மேம்படுத்தவும், நிறுவனங்களின் காலநிலைத் தாங்குதிறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை அதிகரிக்கவும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முதலீடுகள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய நீர் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளை வழங்க முடியும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

எரிபொருள் விநியோகக் குறைபாடு: நிரப்பு நிலைய உரிமையாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

இலங்கையில் இந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 2,381 பேர் உயிரிழப்பு – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

...

arvoshan.com

2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றமில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

...

arvoshan.com

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் அடைமழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

...

arvoshan.com

நுவரெலியாவில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்

...

arvoshan.com

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: அம்பர் எச்சரிக்கை விடுப்பு

...

arvoshan.com

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத இடைத்தரப்பினர் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

...

arvoshan.com

கடுகண்ணாவ பகுதியில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மண்சரிவு; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகளின் நிதி ஒதுக்கீடு – நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

Updated : ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு, 76 பேர் காயம்; மேலதிக விபரங்கள் வெளியீடு

...

arvoshan.com

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் E&Y நிறுவனத்துக்கு வங்கிகளின் கணக்காய்வை மேற்கொள்ள அனுமதி – மத்திய வங்கி விளக்கம்

...

arvoshan.com

ரம்பேவ பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தங்குமிட வசதி – அரசாங்கம் நடவடிக்கை

...

arvoshan.com

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற அரசாங்கம் அர்ப்பணிப்பு – அமைச்சர்

...

arvoshan.com

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் – கடும் காற்று, கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

...

arvoshan.com

ரூ.14.8 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு: நிஷாந்த ரணதுங்க கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

...