இலங்கையர்களின் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு இலவச இரட்டைக் குடியுரிமை – 2027 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவு

arvloshan.com

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை வழித்தோன்றல்களுக்கு கட்டணமின்றி இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டம் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை இலங்கை வம்சாவளியினரை இலக்காகக் கொண்டு 'உலகளாவிய இலங்கை மரபுரிமைக் குடிமக்கள்' (Global Sri Lankan Heritage Citizen) என்ற புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளுக்கும், மூன்றாம் தலைமுறை வழித்தோன்றல்களுக்கும் உரிய கட்டணங்கள் இன்றி இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமும் அவர்களது சந்ததியினரிடமும் காணப்படும் அறிவு, திறன்கள் மற்றும் ஆற்றல்களை நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்குப் பயன்படுத்திக்கொள்வதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கும் அவர்களது பூர்வீகத் தாய்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கான தகைமை நிபந்தனைகள் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027 ஹஜ் பயணம்: இலங்கைக்கு 3,500 இடங்கள் ஒதுக்கீடு

...

arvoshan.com

வரவு செலவுத் திட்டம் 2027: அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பல்வேறு கொடுப்பனவுகளும் அதிகரிப்பு

...

arvoshan.com

வரவு செலவுத் திட்டம் 2027: அரச சேவையில் மேலும் 1,10,000 பேரை நியமிக்க அரசாங்கம் திட்டம்

...

arvoshan.com

வரவு-செலவுத் திட்டம் 2027: பெறுமதி சேர் வரியில் (VAT) முக்கிய மாற்றங்கள் – முழு விபரம்

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: தனிநபர் வருமான வரியில் மேலும் சலுகைகள்

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: PAYE வருமான வரி விலக்கு வரம்பு ரூ.162,500 ஆக அதிகரிப்பு – மேலும் வரிக் குறைப்புகளுக்கு முன்மொழிவு

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.117.3 பில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ருவன்வெலிசாய பகுதியில் ஏற்பட்ட மோதல் – நான்கு பிக்குகள் உட்பட 8 பேர் பொலிஸ் காவலில்

...

arvoshan.com

கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தை - பல மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க மருந்து கொடுத்து மீட்பு

...

arvoshan.com

இலங்கையில் 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு; குழாய்க் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகத்தில் புதிய திட்டங்கள்!

...

arvoshan.com

வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!

...

arvoshan.com

எமிரேட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 528 பில்லியன் ரூபா நட்டம் – ஜனாதிபதி

...

arvoshan.com

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!

...

arvoshan.com

மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரம் – விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி மனு தாக்கல்!

...

arvoshan.com

“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி

...