இரத்மலானை மற்றும் கல்கிசையில் கருபவளங்களுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் கருபவளங்களை வைத்திருந்த இருவர் இரத்மலானை மற்றும் கல்கிசைப் பகுதிகளில் வைத்து இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்மலானை மாலிபன் சந்திக்கு அருகாமையிலும், கல்கிசை "நிசல செவன" மயானப் பகுதியிலும் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெல்லன்விலையில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட வனவிலங்கு வலய அலுவலக அதிகாரிகளும், விமானப்படை புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டுச் சுற்றடைவு நடவடிக்கையின் போதே இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட வனவிலங்கு வலய அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிக்கை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.