ரியாத் சர்வதேச விமான நிலையத் தாக்குதல்: சவூதியா விமான நிறுவனத்தின் விமானி பலி

arvloshan.com

சவூதி அரேபியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான 'சவூதியா' (Saudia) விமான நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விமானி ஒருவர், ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில்  இடம்பெற்ற அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், கப்டன் ஹமூத் அலி அல்கல்தாமி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவரின் மறைவு தொடர்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து சவூதியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேசிய விமான சேவையில் அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையையும் பங்களிப்பையும் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளதுடன், அவரது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைக் இலக்கு வைத்து இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து பொது அதிகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தாக்குதல்களில் சவூதி பிரஜைகள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

விமான நிலையத்தின் முக்கிய உள்கட்டமைப்பு பகுதிகளை இலக்கு வைத்து ஒரு தாக்குதலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சவூதியா நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை இலக்கு வைத்து மற்றொரு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளன. இதில் முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் விமானம் தீப்பற்றிப் பலத்த சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திச் சேவையான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. எனினும், சம்பவத்தின் போது விமானத்தினுள் பயணிகள் எவரும் இருக்கவில்லை என நம்பப்படுகிறது.

யேமனின் ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் பொறுப்பேற்றுள்ளனர். இருப்பினும், விமானி கப்டன் அல்கல்தாமியின் உயிரிழப்பிற்கான துல்லியமான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

சர்வதேச நீதிக்காக போராடிய நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

...

arvoshan.com

முன்னாள் வெனிசுவேலா அதிபர் மதுரோ மீது சித்திரவதைச் சதி வழக்கு: நியூயோர்க்கில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்

...

arvoshan.com

சவூதி விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 3 பேர் பலி; 36 பேர் படுகாயம்!

...

arvoshan.com

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பரபரப்பு: அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆடையில்லா தங்கச் சிலை திறப்பு!

...

arvoshan.com

ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம்

...

arvoshan.com

உலகளவில் 8-இல் 1 புற்றுநோயாளிகளுக்குத் தொற்றுகளே காரணம்: தடுப்பூசிகளால் தவிர்க்க முடியும் என ஆய்வு!

...

arvoshan.com

ரஷ்யாவின் 51% எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அழித்ததாக உக்ரைன் அதிரடி அறிவிப்பு!

...

arvoshan.com

பிரான்ஸில் மாணவர் போராட்டம்: எறிகுண்டு வெடித்து சிறுவன் கை இழப்பு!

...

arvoshan.com

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் தலைநகர் நோக்கி பேரணி

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் ரக்பி ஆதரவாளர்கள் மீது கார் மோதி விபத்து: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

...

arvoshan.com

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைப் பரிசோதனை: எல்லையில் பதற்றம் அதிகரிப்பு!

...

arvoshan.com

ஊடகங்களுக்குத் தடை விதிக்க ட்ரம்பிற்கு அனுமதி கோரும் அமெரிக்க நீதித் திணைக்களம்!

...

arvoshan.com

இம்ரான் கான் பேரணியைத் தடுக்க 2,000 வாகனங்கள் பறிமுதல்: பாகிஸ்தானில் முடங்கியது சரக்கு போக்குவரத்து!

...

arvoshan.com

பஞ்சாப் எல்லையில் BSF துப்பாக்கிச் சூடு: 2 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு; மீண்டும் பதற்றம்

...

arvoshan.com

அமெரிக்காவில் 1 மில்லியன் டொலர் பெறுமதியான அபூர்வ வைரம் கண்டுபிடிப்பு!

...