சவூதி விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 3 பேர் பலி; 36 பேர் படுகாயம்!

arvloshan.com

சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு முக்கிய சர்வதேச விமான நிலையங்களைக் இலக்கு வைத்து, யேமனின் ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (GACA) உறுதிப்படுத்தியுள்ளது.

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அபஹா சர்வதேச விமான நிலையத்தையும் , தலைநகர் ரியாத்திலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தையும் இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அபஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகள் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, தலைநகர் ரியாத்திலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத் தாக்குதலில் சூடான் நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து சவூதி பிரஜைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பயணிகள் மற்றும் விமான நிலையப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, உரிய பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரியாத் நகருக்கு வடக்கே ஏவப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணையை  அரபு கூட்டுப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதுடன், யேமன் தலைநகர் சனாவில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைத் தளத்தையும் தரைமட்டமாக்கியுள்ளதாகச் சவூதி தலைமை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாகச் சவூதி விமான நிலையங்களைக் இலக்கு வைத்துத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரியாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அரசுக்குச் சொந்தமான 'அராம்கோ' எரிபொருள் நிறுவனத்தைச் சுற்றி புதிய பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 18 மற்றும் 19ஆம் திகதிகளிலும் ரியாத் விமான நிலையத்தைக் இலக்கு வைத்து ஹூதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள அச்சுறுத்தல் நிறைந்த பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபியாவில் வாழும் அமெரிக்கப் பிரஜைகள் தீவிர விழிப்புடன் இருக்குமாறு ரியாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

முன்னாள் வெனிசுவேலா அதிபர் மதுரோ மீது சித்திரவதைச் சதி வழக்கு: நியூயோர்க்கில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்

...

arvoshan.com

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பரபரப்பு: அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆடையில்லா தங்கச் சிலை திறப்பு!

...

arvoshan.com

ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம்

...

arvoshan.com

உலகளவில் 8-இல் 1 புற்றுநோயாளிகளுக்குத் தொற்றுகளே காரணம்: தடுப்பூசிகளால் தவிர்க்க முடியும் என ஆய்வு!

...

arvoshan.com

ரஷ்யாவின் 51% எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அழித்ததாக உக்ரைன் அதிரடி அறிவிப்பு!

...

arvoshan.com

பிரான்ஸில் மாணவர் போராட்டம்: எறிகுண்டு வெடித்து சிறுவன் கை இழப்பு!

...

arvoshan.com

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் தலைநகர் நோக்கி பேரணி

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் ரக்பி ஆதரவாளர்கள் மீது கார் மோதி விபத்து: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

...

arvoshan.com

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைப் பரிசோதனை: எல்லையில் பதற்றம் அதிகரிப்பு!

...

arvoshan.com

ஊடகங்களுக்குத் தடை விதிக்க ட்ரம்பிற்கு அனுமதி கோரும் அமெரிக்க நீதித் திணைக்களம்!

...

arvoshan.com

இம்ரான் கான் பேரணியைத் தடுக்க 2,000 வாகனங்கள் பறிமுதல்: பாகிஸ்தானில் முடங்கியது சரக்கு போக்குவரத்து!

...

arvoshan.com

பஞ்சாப் எல்லையில் BSF துப்பாக்கிச் சூடு: 2 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு; மீண்டும் பதற்றம்

...

arvoshan.com

அமெரிக்காவில் 1 மில்லியன் டொலர் பெறுமதியான அபூர்வ வைரம் கண்டுபிடிப்பு!

...

arvoshan.com

‘ஃபிளை துபாய்’ சதிச் செயல்: ஈரானுக்குத் தொடர்பிருப்பின் பாரிய தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை

...

arvoshan.com

காசா விவகாரத்தில் இஸ்ரேலை விமர்சித்த ஐ.நா. சிரேஷ்ட அதிகாரி பணிநீக்கம்

...