ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பலர் படுகாயம்!
அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
A9 வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளும் தனியார் பேருந்து ஒன்றும் மோதியுள்ளன.
விபத்தில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.