மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கோரும் நாடாளுமன்றக் குழு

arvloshan.com

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் முறைமை தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் கோரியுள்ளது.

நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் தகவலின்படி, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போதே இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தத்தமது கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.

மாகாண சபைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் கே. பிரேமச்சந்திரனும், ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் சார்பில் ராமசாமி ராஜேந்திரனும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் சண்முகநாதன் சஞ்சீவனும் கலந்துகொண்டுள்ளனர்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குப் பொருத்தமான தேர்தல் முறைமையை ஆராய்ந்து, அது தொடர்பான பரிந்துரைகளை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிப்பதே குறித்த தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான முனீர் முலாபர், சுனில் வட்டகல மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க மற்றும் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் பின்னர், தேர்தல் முறைமை தொடர்பான இறுதிப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்க தெரிவுக்குழு எதிர்பார்த்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

எரிபொருள் விநியோகக் குறைபாடு: நிரப்பு நிலைய உரிமையாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

இலங்கையில் இந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 2,381 பேர் உயிரிழப்பு – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

...

arvoshan.com

2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றமில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

...

arvoshan.com

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் அடைமழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

...

arvoshan.com

நுவரெலியாவில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்

...

arvoshan.com

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: அம்பர் எச்சரிக்கை விடுப்பு

...

arvoshan.com

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத இடைத்தரப்பினர் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

...

arvoshan.com

கடுகண்ணாவ பகுதியில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மண்சரிவு; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகளின் நிதி ஒதுக்கீடு – நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

Updated : ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு, 76 பேர் காயம்; மேலதிக விபரங்கள் வெளியீடு

...

arvoshan.com

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் E&Y நிறுவனத்துக்கு வங்கிகளின் கணக்காய்வை மேற்கொள்ள அனுமதி – மத்திய வங்கி விளக்கம்

...

arvoshan.com

ரம்பேவ பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தங்குமிட வசதி – அரசாங்கம் நடவடிக்கை

...

arvoshan.com

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற அரசாங்கம் அர்ப்பணிப்பு – அமைச்சர்

...

arvoshan.com

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் – கடும் காற்று, கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

...

arvoshan.com

இலங்கையின் நீர் விநியோகம் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு 300 மில்லியன் டொலர்களை ஒதுக்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

...