பெந்தோட்டை கடலில் நீராடிய ரஷ்ய சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு
பெந்தோட்டை கடற்பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த 30 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (09) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கிய குறித்த வெளிநாட்டுப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பெந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பெந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.