கால்நடை மருத்துவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான புதிய விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

arvloshan.com

தொழில்முறை ஒழுக்க விதிகளை மீறும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, இலங்கை கால்நடை மருத்துவ சபைக்கு தொழில்முறை தவறுகளில் ஈடுபடும் மருத்துவர்களின் பதிவைத் தற்காலிகமாக இடைநிறுத்துதல், பதிவை இரத்துச் செய்தல் மற்றும் எச்சரிக்கை விடுத்தல் உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

மேலும், தொழில்முறை ஒழுக்கமீறல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கால்நடை மருத்துவத் துறையில் அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய ஏனைய செயற்பாடுகள் அல்லது செயற்படத் தவறுதல் தொடர்பான வரைவிலக்கணங்களும் இந்தப் புதிய விதிமுறைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கால்நடை மருத்துவர்களுக்கு எதிரான ஒழுக்கமீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக விசாரணைக் குழுக்களை நியமிக்கும் நடைமுறைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1956ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பயிற்சியாளர்கள் சட்டத்தின் கீழ் இந்த விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கால்நடை மருத்துவர்களைப் பதிவு செய்தல், அவர்களுக்கான தகைமைகளைத் தீர்மானித்தல் மற்றும் தொழில்துறையை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கான சட்டக் கட்டமைப்பை இந்தச் சட்டம் வழங்குகிறது.

2025ஆம் ஆண்டின் இலக்கம் 1 கொண்ட கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பயிற்சியாளர்களின் அவப்பெயருக்குரிய நடத்தை தொடர்பான விதிமுறைகள், 2026 ஜனவரி 5ஆம் திகதியிடப்பட்ட 2470/12ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் முன்வைத்த குறித்த விதிமுறைகளை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

எரிபொருள் விநியோகக் குறைபாடு: நிரப்பு நிலைய உரிமையாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

இலங்கையில் இந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 2,381 பேர் உயிரிழப்பு – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

...

arvoshan.com

2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றமில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

...

arvoshan.com

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் அடைமழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

...

arvoshan.com

நுவரெலியாவில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்

...

arvoshan.com

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: அம்பர் எச்சரிக்கை விடுப்பு

...

arvoshan.com

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத இடைத்தரப்பினர் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

...

arvoshan.com

கடுகண்ணாவ பகுதியில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மண்சரிவு; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகளின் நிதி ஒதுக்கீடு – நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

Updated : ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு, 76 பேர் காயம்; மேலதிக விபரங்கள் வெளியீடு

...

arvoshan.com

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் E&Y நிறுவனத்துக்கு வங்கிகளின் கணக்காய்வை மேற்கொள்ள அனுமதி – மத்திய வங்கி விளக்கம்

...

arvoshan.com

ரம்பேவ பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தங்குமிட வசதி – அரசாங்கம் நடவடிக்கை

...

arvoshan.com

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற அரசாங்கம் அர்ப்பணிப்பு – அமைச்சர்

...

arvoshan.com

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் – கடும் காற்று, கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

...

arvoshan.com

இலங்கையின் நீர் விநியோகம் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு 300 மில்லியன் டொலர்களை ஒதுக்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

...