22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு: கறுப்பு ஆடையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் நாடாளுமன்றம் வருகை
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) கறுப்பு நிற ஆடை அணிந்து நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டனர்.
குறித்த 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே, அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் இந்த ஆடைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அந்த முன்மொழிவை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.