14 இலட்சம் பேரின் அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தப்படவில்லை – அமைச்சர் உபாலி பன்னிலகே

arvloshan.com

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளைப் பெற்று வந்த சுமார் 14 இலட்சம் பேரின் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

தற்போது 12 இலட்சத்து 6 ஆயிரம் பேர் மாத்திரமே அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், 14 இலட்சம் பேரின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரத்தில் நேற்று (29) சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அஸ்வெசும பயனாளர்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதனால் பயனாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என அவர் விளக்கமளித்தார்.

முதற்கட்ட மீளாய்வின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 9 இலட்சத்து 91 ஆயிரம் பயனாளர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்தக் கட்டத்தின் கீழ் தற்போது சுமார் 9 இலட்சத்து 89 ஆயிரம் பேர் கொடுப்பனவுகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, திருத்தப்பட்ட பட்டியலில் சுமார் 2,000 பயனாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 2 இலட்சத்து 15 ஆயிரம் பயனாளர்கள் உள்ளடங்குவதாகவும், இவர்களுக்கான மீளாய்வு நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளைப் பெறுவோரின் எண்ணிக்கையில், மீளாய்வு நிறைவடையும் வரை எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.

மேலும், முதற்கட்டத்தின் கீழ் உள்ள சுமார் 7 இலட்சத்து 40 ஆயிரம் பயனாளர்களுக்கான மீளாய்வு நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மீளாய்வு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், அஸ்வெசும பயனாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்குப் பதிலாக அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, அஸ்வெசும கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தவறான மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் எனப் பொதுமக்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் 'சமூக வலுவூட்டலுக்கான புதிய சக்தி' எனும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்!

...

arvoshan.com

இலங்கையின் பல பகுதிகளில் மோசமடைந்த காற்றின் தரம் – யாழ்ப்பாணத்தில் அதிக பாதிப்பு!

...

arvoshan.com

வெப்ப அழுத்தத்தால் இலங்கையில் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!

...

arvoshan.com

450 கிராம் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!

...

arvoshan.com

கட்டானையில் நாய் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – இருவர் கைது!

...

arvoshan.com

எரிவாயு விநியோகத் தடங்கல்: லாஃப்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

...

arvoshan.com

இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்: 68 சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!

...

arvoshan.com

“ஒரு சாராயப் போத்தலும் 2,000 ரூபாயும்!” – பொலிஸாரைச் சாடிய பிக்கு; ஹோமாகம இளைஞரின் மரணத்தில் சர்ச்சை!

...

arvoshan.com

டப்ளின் விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு இனவாத அவமதிப்பு? – ரயன்எயார் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு!

...

arvoshan.com

விமான நிலையத்தில் கைதான கிருஷ்ணகுமார் மல்லாகம் நீதிமன்றத்தால் விடுதலை!

...

arvoshan.com

களுத்துறையில் சொகுசுப் பேருந்தை வழிமறித்து தாக்குதல் – ஆறு பேர் கைது!

...

arvoshan.com

உஸ்பெகிஸ்தானில் இருந்து மத்தளைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்!

...

arvoshan.com

ஹோமாகம சந்தேகநபரின் மரணத்தில் புதிய தகவல்கள்! தாக்குதலால் ஏற்பட்ட காயங்களே காரணமென பொலிஸார் சந்தேகம்

...

arvoshan.com

சுகாதாரம், தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இலங்கை – தாய்லாந்து ஒத்துழைப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை!

...

arvoshan.com

வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை!

...