450 கிராம் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!
450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று (30) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் தலா 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைத் திருத்தம் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.