வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை!

arvloshan.com

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதனால், பல நாள் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளின் உரிமையாளர்கள், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலத் தாழ்வுநிலை, இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் தாழமுக்கமாக உருவெடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வானிலை ஆலோசனை இன்று பிற்பகல் 4.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தாழமுக்கம் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மேற்கு - வடமேற்குத் திசையில் நகரும் இந்த வானிலைத் தொகுதி, அடுத்துவரும் இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெற்று இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

இதன் காரணமாக, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஆழ்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

14 இலட்சம் பேரின் அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தப்படவில்லை – அமைச்சர் உபாலி பன்னிலகே

...

arvoshan.com

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்!

...

arvoshan.com

இலங்கையின் பல பகுதிகளில் மோசமடைந்த காற்றின் தரம் – யாழ்ப்பாணத்தில் அதிக பாதிப்பு!

...

arvoshan.com

வெப்ப அழுத்தத்தால் இலங்கையில் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!

...

arvoshan.com

450 கிராம் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!

...

arvoshan.com

கட்டானையில் நாய் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – இருவர் கைது!

...

arvoshan.com

எரிவாயு விநியோகத் தடங்கல்: லாஃப்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

...

arvoshan.com

இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்: 68 சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!

...

arvoshan.com

“ஒரு சாராயப் போத்தலும் 2,000 ரூபாயும்!” – பொலிஸாரைச் சாடிய பிக்கு; ஹோமாகம இளைஞரின் மரணத்தில் சர்ச்சை!

...

arvoshan.com

டப்ளின் விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு இனவாத அவமதிப்பு? – ரயன்எயார் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு!

...

arvoshan.com

விமான நிலையத்தில் கைதான கிருஷ்ணகுமார் மல்லாகம் நீதிமன்றத்தால் விடுதலை!

...

arvoshan.com

களுத்துறையில் சொகுசுப் பேருந்தை வழிமறித்து தாக்குதல் – ஆறு பேர் கைது!

...

arvoshan.com

உஸ்பெகிஸ்தானில் இருந்து மத்தளைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்!

...

arvoshan.com

ஹோமாகம சந்தேகநபரின் மரணத்தில் புதிய தகவல்கள்! தாக்குதலால் ஏற்பட்ட காயங்களே காரணமென பொலிஸார் சந்தேகம்

...

arvoshan.com

சுகாதாரம், தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இலங்கை – தாய்லாந்து ஒத்துழைப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை!

...