மொரட்டுவையில் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு – வைத்தியசாலையில் அனுமதி
மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரில் வந்த நபர்களே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவக உரிமையாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் அடையாளங்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.