மூன்று மாத தொடர் விலை அதிகரிப்புக்குப் பின்னர் எரிபொருள் விலைகளைக் குறைத்தது ஐக்கிய அரபு இராச்சியம்!

arvloshan.com

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை வாகன உரிமையாளர்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கியுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் ஒரு லீற்றர் 4.40 திர்ஹமாக விற்பனை செய்யப்பட்ட Super 98 ரக பெற்றோலின் விலை, நவம்பர் மாதத்தில் 4.16 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் 376 இலங்கை ரூபாவுக்கு இவ்வகை பெற்றோலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று, Special 95 ரக பெற்றோலின் விலை 4.28 திர்ஹமிலிருந்து 4.04 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை ரூபா பெறுமதி சுமார் 366 ரூபாவாகும்.

E-Plus 91 ரக பெற்றோலின் விலையும் 4.21 திர்ஹமிலிருந்து 3.97 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை சுமார் 359 இலங்கை ரூபாவாக இருக்கும்.

இதற்கிடையில், டீசல் விலையும் ஒரு லீற்றருக்கு 4.80 திர்ஹமிலிருந்து 4.75 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை ரூபா பெறுமதி சுமார் 430 ரூபாவாகும்.

இந்த புதிய விலைகள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளன.

இதன்படி, பெற்றோல் விலைகள் சுமார் 5.5 முதல் 5.7 சதவீதம் வரையிலும், டீசல் விலை சுமார் ஒரு சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையால் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சர்வதேச சந்தையின் நிலவரங்களுக்கு ஏற்ப ஐக்கிய அரபு இராச்சியம் மாதாந்தம் தனது உள்நாட்டு எரிபொருள் விலைகளை மீளாய்வு செய்து மாற்றியமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

டைட்டானிக்கை விட நீளமான கப்பல் கடலில் மூழ்கடிப்பு! உலகின் மிகப்பெரிய செயற்கைப் பவளப்பாறையாக மாற்றம்

...

arvoshan.com

புரூக்ளின் கட்டட இடிபாடு: உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

...

arvoshan.com

கல்விச் சான்றிதழ் சர்ச்சை: இந்தோனேசிய துணை ஜனாதிபதி பதவி விலகல்

...

arvoshan.com

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா பரவல்: 11 ஆயிரத்தைக் கடந்த தொற்றாளர்கள்; 5,387 பேர் உயிரிழப்பு

...

arvoshan.com

ரஷ்யா – உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்கு இணக்கம்: போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் இல்லை

...

arvoshan.com

பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளர் வீட்டில் சடலமாக மீட்பு; கணவர் கொலை செய்ததாக ஒப்புதல்!

...

arvoshan.com

ஈரானுடனான போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப்

...

arvoshan.com

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் – ட்ரம்ப் அறிவிப்பு

...

arvoshan.com

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் சாதனங்கள் மீது சைபர் தாக்குதல் – ஈரான் மீது குற்றச்சாட்டு!

...

arvoshan.com

பராகுவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணை; பதவி நீக்க நடவடிக்கையும் ஆரம்பம்!

...

arvoshan.com

வங்கி நெருக்கடியால் ஜனாதிபதி பதவி விலகல் – பராகுவேயில் அரசியல் நெருக்கடி!

...

arvoshan.com

பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்க மறுத்த இத்தாலிய சமையல் கலைஞர் அவுஸ்திரேலியாவில் பணிநீக்கம்!

...

arvoshan.com

ஜோர்டானில் இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே பயங்கரவாதத் தாக்குதல் – பாதுகாப்பு அதிகாரி பலி!

...

arvoshan.com

பிரான்ஸில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: மக்ரோன் அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

...

arvoshan.com

ட்ரம்பின் ‘ஹஷ் மணி’ வழக்கு: குற்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கறிஞர்கள் முன்னிலை

...