பிலியந்தலையில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு!
பிலியந்தலை, சுவரபொல பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை காரில் வந்த குழுவினர் வழிமறித்து, வானத்தை நோக்கிப் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் வந்த சந்தேக நபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்த பின்னர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கும், சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.