பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் – உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை விசாரித்து வருகின்றது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிட்டு, சுமார் 25 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய குறித்த சரத்துகளைச் சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெறப்படுவதுடன், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.