நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய பௌத்த பிக்கு; நாளை வரை விளக்கமறியலில்
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் கட்டடம் ஒன்றை நிர்மாணித்தமை மற்றும் புத்தர் சிலை ஒன்றை நிறுவியமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில், வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விகாரை வளாகத்தில் புத்தர் சிலையுடன் கூடிய வழிபாட்டுக் கட்டடம் ஒன்றை நிர்மாணித்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.