நிலக்கரி இறக்குமதி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் டிசம்பர் 16 வரை நீடிப்பு
நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றிருக்கக்கூடிய முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் 2026 டிசம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்தக் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் 2026 ஒக்டோபர் 16ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதன் விசாரணைப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை ஆணைக்குழுவின் கால நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2026 ஏப்ரல் 17ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.