ஞானசார தேரர் காவி உடையுடன் நீதிமன்றத்தில் முன்னிலை – ஒக்டோபர் 23ஆம் திகதி
காவி உடையுடன் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரை காவி உடையுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய உரிய நடைமுறைகள் தொடர்பில் ஆலோசனை கோரி, அவர் சார்ந்த நிகாயத்தின் மகாநாயக்க தேரருக்கு பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் கோரியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.