காலி கோட்டைப் பகுதியில் பாறைகளுக்குள் சிக்கிய கடல் ஆமையை மீட்ட பொலிஸார்!
காலி கோட்டைப் பகுதியில் கடற்கரையோரப் பாறைகளுக்கு இடையில் சிக்கித் தவித்த கடல் ஆமையொன்றை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விடுவித்துள்ளனர்.
சனிக்கிழமை (14) காலி கோட்டையின் மதில்களைச் சுற்றிப் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பாறைகளுக்கு இடையில் ஆமை ஒன்று சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, கோட்டை மதில்களிலிருந்து கீழே இறங்கிய பொலிஸார், பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த ஆமையைப் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.
அப்பகுதியில் நிலவிய கடல் கொந்தளிப்பு காரணமாக, ஆமை கரையொதுங்கி பாறைகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி கோட்டை பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.