காசா விவகாரத்தில் இஸ்ரேலை விமர்சித்த ஐ.நா. சிரேஷ்ட அதிகாரி பணிநீக்கம்

arvloshan.com

இஸ்ரேல் - காசா போர்ப் பதற்றம் மற்றும் காசாவில் நிலவும் பஞ்சம் தொடர்பில் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தமையால், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பில் (FAO) 26 ஆண்டுகள் பணியாற்றிய சிரேஷ்ட பணிப்பாளர் பென் டேவிஸ் என்பவரே இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காசாவில் நிலவும் பட்டினி மற்றும் பஞ்ச நிலைமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரோமில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமையகத்தில் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார் என்றும், நடுநிலைமை விதிகளை மீறினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை மாதத்துடன் தனது ஒப்பந்தக் காலம் புதுப்பிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதாக பென் டேவிஸ் பிரெஞ்சு செய்திச் சேவையான ஏ.எஃப்.பி.க்கு (AFP) தெரிவித்துள்ளார்.

மேலும், காசாவின் உணவு விநியோகம் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றைத் தயாரித்தமைக்காகவும் அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். குறித்த அறிக்கையை இணையதளத்திலிருந்து அகற்றுமாறு நிர்வாகம் உத்தரவிட்டதாகவும், மனிதநேயச் சட்டம் தொடர்பான எந்தவொரு குறிப்பையும் அதில் உள்ளடக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, நிறுவனத்தின் பொதுப் பணிப்பாளர் கியூ டொங்யு ஊழியர்கள் மத்திய உரையாற்றுகையில், "எமது அமைப்பில் மனித உரிமைகள் விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்க முடியாது. மனித உரிமைகள் முக்கியமானவைதான், ஆனால் அதற்கான தனி அமைப்பு ஜெனீவாவில் உள்ளது. அரசியலில் ஈடுபடும் சிரேஷ்ட அதிகாரிகளை நான் பணிநீக்கம் செய்வேன்" எனக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுப் பணிப்பாளரின் இந்தக் கருத்துக்கள் முற்றிலும் தன்னைக் குறித்தே தெரிவிக்கப்பட்டுள்ளதாக பென் டேவிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் காசாவில் 74,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன், இத்தரவுகளை ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

பாகிஸ்தானில் ஆளுநர் ஆட்சி: அடிப்படை உரிமைகளைப் பறிக்கக் கூடாது என எச்சரிக்கை

...

arvoshan.com

நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம்

...

arvoshan.com

உலக அரங்கில் பெரும் திருப்பம்: ரஷ்யா - உக்ரைன் போரில் ‘எரிசக்தி போர்நிறுத்தம்’ அறிவித்தார் டொனால்டு ட்ரம்ப்!

...

arvoshan.com

சர்வதேச நீதிக்காக போராடிய நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

...

arvoshan.com

ரியாத் சர்வதேச விமான நிலையத் தாக்குதல்: சவூதியா விமான நிறுவனத்தின் விமானி பலி

...

arvoshan.com

முன்னாள் வெனிசுவேலா அதிபர் மதுரோ மீது சித்திரவதைச் சதி வழக்கு: நியூயோர்க்கில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல்

...

arvoshan.com

சவூதி விமான நிலையங்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 3 பேர் பலி; 36 பேர் படுகாயம்!

...

arvoshan.com

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பரபரப்பு: அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆடையில்லா தங்கச் சிலை திறப்பு!

...

arvoshan.com

ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம்

...

arvoshan.com

உலகளவில் 8-இல் 1 புற்றுநோயாளிகளுக்குத் தொற்றுகளே காரணம்: தடுப்பூசிகளால் தவிர்க்க முடியும் என ஆய்வு!

...

arvoshan.com

ரஷ்யாவின் 51% எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அழித்ததாக உக்ரைன் அதிரடி அறிவிப்பு!

...

arvoshan.com

பிரான்ஸில் மாணவர் போராட்டம்: எறிகுண்டு வெடித்து சிறுவன் கை இழப்பு!

...

arvoshan.com

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் தலைநகர் நோக்கி பேரணி

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் ரக்பி ஆதரவாளர்கள் மீது கார் மோதி விபத்து: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

...

arvoshan.com

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைப் பரிசோதனை: எல்லையில் பதற்றம் அதிகரிப்பு!

...