கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வருமானத்தை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

arvloshan.com

இலங்கை கடற்படையின் கப்பல்களிலுள்ள பாதுகாப்புக் குழுக்களுக்கு (Onboard Security Team – OBST) வழங்கப்படும் ஆதரவு சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும், அதன் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது, குறித்த வேலைத்திட்டத்தின் செயற்பாட்டு முன்னேற்றம் மற்றும் நிதி நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காலியில் அமைந்துள்ள பெட்டிகலாவத்தை ஆயுதக் களஞ்சியத் தொகுதிக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் அண்மையில் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின்போது அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வணிகக் கப்பல்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தக் களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. இலங்கை கடற்படையின் ஆதரவுடன் இந்தச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த நடவடிக்கைகளில் காணப்படும் செயற்பாட்டுக் குறைபாடுகள், அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆதரவு சேவைகள் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இந்தச் சேவைகள் தொடர்ந்தும் தடையின்றியும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், இச்செயற்பாடுகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் முறையான நிதி முகாமைத்துவம் ஆகியவற்றைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜே.எம். விஜேபண்டார, பாதுகாப்புச் செயலாளர், கடற்படைத் தளபதி, ரக்னா அரக்ஷ லங்கா நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் ரக்னா அரக்ஷ லங்கா நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

எரிபொருள் விநியோகக் குறைபாடு: நிரப்பு நிலைய உரிமையாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

இலங்கையில் இந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 2,381 பேர் உயிரிழப்பு – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

...

arvoshan.com

2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றமில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

...

arvoshan.com

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் அடைமழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

...

arvoshan.com

நுவரெலியாவில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்

...

arvoshan.com

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: அம்பர் எச்சரிக்கை விடுப்பு

...

arvoshan.com

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத இடைத்தரப்பினர் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

...

arvoshan.com

கடுகண்ணாவ பகுதியில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மண்சரிவு; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகளின் நிதி ஒதுக்கீடு – நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

Updated : ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு, 76 பேர் காயம்; மேலதிக விபரங்கள் வெளியீடு

...

arvoshan.com

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் E&Y நிறுவனத்துக்கு வங்கிகளின் கணக்காய்வை மேற்கொள்ள அனுமதி – மத்திய வங்கி விளக்கம்

...

arvoshan.com

ரம்பேவ பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தங்குமிட வசதி – அரசாங்கம் நடவடிக்கை

...

arvoshan.com

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற அரசாங்கம் அர்ப்பணிப்பு – அமைச்சர்

...

arvoshan.com

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் – கடும் காற்று, கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

...

arvoshan.com

இலங்கையின் நீர் விநியோகம் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு 300 மில்லியன் டொலர்களை ஒதுக்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

...