ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பரபரப்பு: அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆடையில்லா தங்கச் சிலை திறப்பு!

arvloshan.com

ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான பாதையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆடையற்ற தங்கச் சிலை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 'நீதியின் அரசன்' மற்றும் 'ஆரஞ்சு கொள்ளைநோய்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிலை, உலக அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கத்தையும், உலக ஒழுங்கிற்கு ஏற்படும் அச்சுறுத்தலையும் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

8.5 அடி (2.6 மீற்றர்) உயரமுள்ள இந்தச் செப்புச் சிலைக்கு 23-காரட் தங்கத் தகடு பூசப்பட்டுள்ளது. பலவீனமான மனிதர் ஒருவரின் தோள்கள் மீது அதிபர் டிரம்ப் அமர்ந்திருப்பது போன்றும், அவரது கால்களும் வயிறும் அந்த மனிதனின் தலையை அழுத்துவது போன்றும் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், டிரம்பின் கரங்களில் கோல்ஃப் மட்டையும் நீதியின் தராசும் ஏந்தப்பட்டுள்ளன.

இந்தச் சிலையின் பீடத்தில், "நான் ஒரு மனிதனின் முதுகில் அமர்ந்திருக்கிறேன். என் பாரம் தாங்காமல் அவன் மூழ்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உதவ நான் எதையும் செய்வேன்... என் கால்களை அவன் முதுகிலிருந்து எடுப்பதைத் தவிர" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பியான யென்ஸ் கல்சியோட் (Jens Galschiøt) என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, டென்மார்க் நாட்டின் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் பேர் கிளாஸன் என்பவரின் ஏற்பாட்டில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய சிற்பி கல்சியோட், "டிரம்பிற்கு தங்கம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இந்தச் சிலை அவருக்குப் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய சட்ட விதிகளை டிரம்ப் சீர்குலைப்பதாக நான் கருதுகிறேன். சர்வாதிகாரிகளுக்கு அவர்கள் மீது மற்றவர்கள் சிரிப்பது பிடிப்பதில்லை. ஹென்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின்  'அரசனின் புதிய ஆடைகள்' என்ற கதையை நினைவுபடுத்தும் வகையிலேயே அதிபர் டிரம்பை ஆடைகளின்றிச் சித்தரித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச அரசியல் அரங்கில் டிரம்பின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்தும், உலக அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஐரோப்பிய சமூகத்தில் விவாதத்தைத் தூண்டுவதே இதன் நோக்கம் என்றும் ஏற்பாட்டாளர் பேர் கிளாஸன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 1989 ஆம் ஆண்டு சீனா டெய்னன்மென் சதுக்கத்தில் நடத்திய படுகொலைகளை நினைவுபடுத்தும் 'அவமானத்தின் தூண்' என்ற புகழ்பெற்ற சிலையை வடித்து சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவர் சிற்பி கல்சியோட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிலை வியாழக்கிழமை வரை காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன், இதன் 1,000 க்கும் மேற்பட்ட சிறிய மாதிரிகள் (3D-printed miniatures) 'எதிர்ப்புச் சின்னங்களாக' பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்தச் சிலை விவகாரம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை எவ்விதக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம்

...

arvoshan.com

உலகளவில் 8-இல் 1 புற்றுநோயாளிகளுக்குத் தொற்றுகளே காரணம்: தடுப்பூசிகளால் தவிர்க்க முடியும் என ஆய்வு!

...

arvoshan.com

ரஷ்யாவின் 51% எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அழித்ததாக உக்ரைன் அதிரடி அறிவிப்பு!

...

arvoshan.com

பிரான்ஸில் மாணவர் போராட்டம்: எறிகுண்டு வெடித்து சிறுவன் கை இழப்பு!

...

arvoshan.com

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் தலைநகர் நோக்கி பேரணி

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் ரக்பி ஆதரவாளர்கள் மீது கார் மோதி விபத்து: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

...

arvoshan.com

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைப் பரிசோதனை: எல்லையில் பதற்றம் அதிகரிப்பு!

...

arvoshan.com

ஊடகங்களுக்குத் தடை விதிக்க ட்ரம்பிற்கு அனுமதி கோரும் அமெரிக்க நீதித் திணைக்களம்!

...

arvoshan.com

இம்ரான் கான் பேரணியைத் தடுக்க 2,000 வாகனங்கள் பறிமுதல்: பாகிஸ்தானில் முடங்கியது சரக்கு போக்குவரத்து!

...

arvoshan.com

பஞ்சாப் எல்லையில் BSF துப்பாக்கிச் சூடு: 2 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு; மீண்டும் பதற்றம்

...

arvoshan.com

அமெரிக்காவில் 1 மில்லியன் டொலர் பெறுமதியான அபூர்வ வைரம் கண்டுபிடிப்பு!

...

arvoshan.com

‘ஃபிளை துபாய்’ சதிச் செயல்: ஈரானுக்குத் தொடர்பிருப்பின் பாரிய தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை

...

arvoshan.com

காசா விவகாரத்தில் இஸ்ரேலை விமர்சித்த ஐ.நா. சிரேஷ்ட அதிகாரி பணிநீக்கம்

...

arvoshan.com

காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 10 பொதுமக்கள் பலி

...

arvoshan.com

சோமாலிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூடு: இந்தியர் உட்பட 5 கப்பல் ஊழியர்கள் பலி!

...