இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் நீர்வழங்கல் சபைத் தலைவர் கைது
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர் கைது செய்யப்பட்டமைக்கான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.