இந்தியாவில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் வீழ்ந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

arvloshan.com

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 200 அடி ஆழமுடைய திறந்த ஆழ்குழாய் கிணற்றில் வீழ்ந்த மூன்று வயது சிறுமி, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று (28) திங்கட்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத் பகுதியில் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் இச்சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி, எதிர்பாராதவிதமாக அருகில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரவு 7.45 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு (NDRF) தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, இரவு 9.05 மணியளவில் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

சுமார் 10 மணி நேரத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, இன்று அதிகாலை 3.50 மணியளவில் சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அச்சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

10 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சிறுமி உயிருடன் மீட்கப்பட்டும், இறுதியில் அவரது உயிர் பிரிந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மதுரையில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட 'ரோடு ஷோ': கடுமையான வெயிலில் 10 பேர் மயக்கம்!

...

arvoshan.com

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை: 56 பேர் பலி, 1000 வீடுகள் சேதம்!

...

arvoshan.com

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் விஜய்

...

arvoshan.com

சூரியசக்தித் துறையில் 16 பில்லியன் $ முதலீடு: இந்தியாவிற்கு அமெரிக்கா விதிக்கும் புதிய வரிச் சவால்!

...

arvoshan.com

‘விஜய்யை சாடிய ஸ்டாலின்’: முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தை சுயபரிசோதனை செய்ய கோரிக்கை!

...

arvoshan.com

ஜெம் வீரமணி வழக்கைப் பூசிமெழுகிய திமுக: மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் சாடல்!

...

arvoshan.com

ஜப்பானுக்குப் போட்டியாக இந்தியாவின் புதிய அதிவேக 'B35' புல்லட் ரயில்!

...

arvoshan.com

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தொழுப்பேட்டில் நாளை முதல்வர் விஜய் தீவிரப் பிரச்சாரம்!

...

arvoshan.com

நொய்டாவில் ஓடும் பேருந்தில் தீ விபத்து: பெண் உட்பட 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு

...

arvoshan.com

திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் ரூ.29 கோடி உண்டியல் வருமானம்; 33 லட்சம் லட்டுகள் விற்பனை!

...

arvoshan.com

ரூ.10,000 சம்பளப் பிரச்சினை: சூரத்தில் ரூ.24 கோடி ஆடைகள் தீக்கிரை!

...

arvoshan.com

தமிழக மீனவர் படகுகள் அழிப்பு: மத்திய அரசுக்கு மீனவர் காங்கிரஸ் கண்டனம்!

...

arvoshan.com

சபரிமலையில் அரவணைத் தட்டுப்பாடு: கேரள அரசு - தேவஸ்தான வாரியம் இடையே மோதல்

...

arvoshan.com

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதலமைச்சர் விஜய்!

...

arvoshan.com

“முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கு பாடம் புகட்டும் வாய்ப்பே இடைத்தேர்தல்...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

...