ஆறு மாதங்களுக்குள் 6.5 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள், 4.5 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டம்
இலங்கையில் நிலுவையில் உள்ள 6 இலட்சத்து 50 ஆயிரம் வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 4 இலட்சத்து 50 ஆயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற விமானப்படை உப மார்ஷல் துஷார இடுனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ஐந்து மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் பதிவு நிலையங்களை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கம்பஹா மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் பதிவு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலையங்களை குருநாகல், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு மாத்திரமன்றி, ஏனைய வாகன வகைகளுக்கும் இந்தப் பதிவு சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துஷார இடுனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், வாகன இலக்கத் தகடுகளின் தரநிலைகள் தொடர்பாகவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்