அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் இணையும் நடிகர் பார்த்திபன்!

arvloshan.com

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதை நடிகர் பார்த்திபன் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீண்ட நாட்களாக கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வந்த நடிகர் அஜித் குமார், அடுத்ததாக ‘குட் பேட் அக்லி’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைந்து ‘டேர் டெவில்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரேவ்ஹார்ட் (Braveheart) தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இன்று (நவம்பர் 2) தொடங்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இப்படத்தில் தான் நடிப்பதை நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் (X) தளப் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில், “இன்று டேர் டெவில் நாள். சிறந்தவரான அஜித் குமாருடன் இணைந்து நடிப்பதிலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் பணியாற்றுவதிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் அஜித் குமாருடன் ஸ்ரீலீலா, பிரபு, பார்த்திபன், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவுப் பணிகளையும், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29ஆம் திகதி உலகளாவிய ரிலீஸ்!

...

arvoshan.com

குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட ஆபரணம் சர்ச்சை: கரீனா கபூருக்கு சட்ட அறிவிப்பு!

...

arvoshan.com

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமணப் புகைப்படங்கள்

...

arvoshan.com

‘சீன்’ படத்தின் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா – ஜோதிகா நெகிழ்ச்சிப் பதிவு

...

arvoshan.com

காதலர் ராஜவேல் ராஜை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்!

...

arvoshan.com

‘டேர் டெவில்’ படப்பிடிப்பில் நவம்பர் 12ஆம் தேதி பங்கேற்கும் அஜித்

...

arvoshan.com

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு ஆரம்பம் – முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் – நவம்பர் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்!

...

arvoshan.com

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணையும் ஸ்ரீலீலா – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

...

arvoshan.com

இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 5 யூடியூபர்கள் யார்? மாத வருமானம் பல கோடிகளாம்!

...

arvoshan.com

புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு வாரம் தினமும் 6 காட்சிகள் – முதல்வர் விஜய் உத்தரவு!

...

arvoshan.com

தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைத்த ‘ஜெயிலர் 2’: ரூ.800 கோடியைக் கடந்த வசூல்!

...

arvoshan.com

‘ஓம்’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த தனுஷுக்கு சூர்யா நன்றி!

...

arvoshan.com

குற்றப் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படத்தில் பிரேம்ஜி அமரன்!

...

arvoshan.com

ஷாருக்கானின் ‘King’ திரைப்படம் – வெளிநாட்டு விநியோக உரிமை ரூ.175 கோடிக்கு விற்பனை!

...