இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்: புற்றுநோயால் பாதிப்பு,

arvloshan.com

சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி  காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இன்று மாலை ஐந்து மணியளவில் கொழும்பில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது உடல் நாளை சென்னைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.

பவதாரிணி பற்றி

'பாரதி' படத்தின் 'மயில் போல பொண்ணு ஒண்ணு' என்ற தமிழ் பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

‘இராசையா’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி. அப்போதிருந்து, அவர் தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்காக பல பாடல்களைப் பாடினார்.

அவர் இசையமைப்பாளர்களான தேவா மற்றும் சிற்பி ஆகியோருக்காகவும் பாடல்களை பாடியுள்ளார்.

2002ஆம் ஆண்டு, ரேவதி இயக்கிய 'மித்ர் மை ஃப்ரெண்ட்' படம் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.

பின்னர் 'ஃபிர் மிலேங்கே' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இறுதியான மலையாளப் படமான 'மாயநதி' என்ற படத்திற்கு இசைய அமைத்திருந்தார்.

மேலும்,'காதலுக்கு மரியாதை', 'பாரதி', 'அழகி', 'நண்பர்கள்', 'பா', 'மங்காத்தா' மற்றும் 'அநேகன்' போன்ற தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

கட்சியின் பெயரை மாற்றிய தளபதி விஜய்

...

ARVLoshan.com

மசூதி இடிப்பால் உத்தரகாண்டில் வெடித்தது வன்முறை: நால்வர் பலி, 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் காயம்

...

ARVLoshan.com

விஜயின் அரசியல் பிரவேசம் உறுதியானது: திராவிடர் என்பதை தவிர்த்தார், நடிப்புக்கும் முற்றுப்புள்ளி

...

ARVLoshan.com

இலங்கையில் இருந்து சகோதரியின் உடலை சென்னைக்கு கொண்டுவந்த யுவன்: கலங்கி நிற்கும் குடும்பத்தினர்

...