வருமான வரி செலுத்த மேலும் இரு நாட்களே அவகாசம்!
2025/26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியை (Income Tax) செலுத்துவதற்கு வரி செலுத்துவோருக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட தவணைத் தேதிக்குள் உரிய வருமான வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தவறும் பட்சத்தில், சட்டப்பூர்வ அபராதங்கள் மற்றும் வட்டித் தொகைகள் அறவிடப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.