ரூ.15,300 கோடி முதலீடு: லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்

arvloshan.com

பிரித்தானியாவிற்கான (UK) உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு தமிழக முதல்வர் விஜய் இன்று சென்னை திரும்பினார். முதல்வரின் இந்த விஜயத்தின் மூலமாக மாநிலத்தில் ரூ.15,300 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊடகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொருளாதார இலக்கு மற்றும் முதலீடுகள்

தமிழகத்தை எதிர்வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) ஆட்சி அமைந்த முதலாவது 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் ரூ.1.03 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1.21 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாகவே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் கடந்த 10-ஆம் திகதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமியைச் சந்தித்து, இந்தியா - பிரித்தானியா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலமாக தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசித்தார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் மற்றும் கள ஆய்வு

தமிழகத்தில் உலகத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 3-ஆம் திகதி முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதனைச் செயல்படுத்தும் வகையில், லண்டனில் அமைந்த புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’மைதானத்தை அவர் பார்வையிட்டார். அங்கு சர்வதேச பந்தயங்களை நடத்துவதற்கான கட்டுப்பாட்டு அறைகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.

மேலும், நடிகர் அஜித்குமார் பங்கேற்ற 'லீ மான்ஸ் கோப்பை'க்கான கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன், அஜித்குமாருடன் பந்தயக் காரிலும் பயணித்தார்.

முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள்

கடந்த 14-ஆம் திகதி முதல்வர் விஜய் முன்னிலையில் சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் ரூ.15,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் : ரூ.11,000 கோடி முதலீட்டில் உற்பத்தி மற்றும் தளவாட வசதிகளை நிறுவுகிறது. இதன்மூலம் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஐரோப்பிய வாகன உதிரிபாக நிறுவனம்: ரூ.3,000 கோடி முதலீட்டில் ஆலை அமைக்க விருப்பக் கடிதம் (LOI) வழங்கியுள்ளது.

எர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young): சென்னை மவுன்ட் - பூந்தமல்லி பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திறன் மையத்தை அமைக்கவுள்ளது.

சிக்மா டெக்னாலஜி  & வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் : ஸ்வீடன் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த இந்நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

தொழிலதிபர் சந்திப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

அசோக் லேலண்ட் நிர்வாகத் தலைவர் தீரஜ் இந்துஜா, ஃபினோலெக்ஸ் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா இந்துஜா சாப்ரியா ஆகியோர் முதல்வரைச் சந்தித்தனர். இதன்போது தமிழகத்தில் ரூ.2,500 கோடி முதலீட்டின் தற்போதைய முன்னேற்றம், காற்றாலை மின்சக்தித் துறை முதலீடுகள் மற்றும் வணிக வாகன ஏற்றுமதி குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ஓசூருக்கு பிரித்தானிய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகளின் வருகை, அக்டோபர் மாதத்தில் லண்டன் மேயர் ஆணையப் பிரதிநிதிகளின் சென்னை வருகை உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

லண்டன் வாழ் தமிழர்கள் சந்திப்பு ரத்து

இப்பயணத்தின் போது லண்டன் வாழ் தமிழர்களைச் சந்திக்க முதல்வர் திட்டமிட்டிருந்தார். எனினும், அதிகளவிலான மக்கள் கூட்டம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் லண்டன் காவல் துறை அனுமதி மறுத்ததால் அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இதற்காக லண்டன் வாழ் தமிழர்களிடம் முதல்வர் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

தமிழகத்தை நோக்கி வரும் தொழில் முதலீட்டுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் இந்த லண்டன் விஜயம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு: முதல்வர் விஜய் விரிவாக்கம்!

...

arvoshan.com

‘தாய்மாமன்’ தங்க மோதிர திட்டத்தை செப். 28-இல் தொடங்குகிறார் முதல்வர் விஜய்!

...

arvoshan.com

டெல்லியில் கொடூரம்: 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

...

arvoshan.com

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மின்சார இருசக்கர வாகன வாடகைச் சேவை தொடக்கம்!

...

arvoshan.com

ராமசாமி படையாச்சியார் 109-வது பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி!

...

arvoshan.com

விநாயகர் சதுர்த்தி: மகாராஷ்டிராவில் கிலோ 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் தங்க மோதகம்!

...

arvoshan.com

விஜய் சேதுபதி மீதான அவதூறு: தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

...

arvoshan.com

பெரியார், அண்ணா பேரணிகளுக்கு தடை: உதயநிதி கடும் கண்டனம்!

...

arvoshan.com

அண்ணா பிறந்த நாள்: 180 சீருடைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு

...

arvoshan.com

முதலமைச்சர் விஜய் - நடிகர் அஜித் சந்திப்பு: பரஸ்பரம் பரிசுகளைப் பரிமாறி நெகிழ்ச்சி!

...

arvoshan.com

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

...

arvoshan.com

பிரிக்ஸ் 18-வது உச்சி மாநாடு: ‘புதுடெல்லி பிரகடனம்’ ஒருமனதாக நிறைவேற்றம்!

...

arvoshan.com

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு 'திருக்குறள்' ரஷ்ய மொழிபெயர்ப்பைப் பரிசளித்தார் இந்தியப் பிரதமர் மோடி

...

arvoshan.com

மூத்த தமிழறிஞர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா காலமானார்: தமிழக முதல்வர் விஜய் தீவிர இரங்கல்

...

arvoshan.com

இலங்கைத் தமிழர் மீது தாக்குதல்: அதிகாரியைக் கைது செய்யாவிடில் போராட்டம் - சீமான் எச்சரிக்கை!

...