பேராதனை - கம்பளை இடையிலான புகையிரத சேவை ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

arvloshan.com

டித்வா சூறாவளி காரணமாகப் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த பிரதான புகையிரதப் பாதையின் பேராதனை மற்றும் கம்பளை இடையிலான புகையிரதச் சேவைகள், சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ரம்புக்கனை மற்றும் கம்பளைக்கு இடையிலான புகையிரதப் பாதையில் 103 இடங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருந்தன. இதில் 36 இடங்களில் பாரிய நிலச்சரிவுகளும், 67 இடங்களில் மண்சரிவுகளும் பதிவாகியிருந்ததாக இலங்கை புகையிரதச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) ஒத்துழைப்புடன், புகையிரதத் திணைக்களத்தின் பாதை மற்றும் பராமரிப்புத் துணைப் பிரிவினர் இந்தச் சீரமைப்புப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். ரம்புக்கனை - கதுகன்னாவை இடையிலான செங்குத்தான பாதை அமைப்பு, மாற்று வீதி வசதிகள் இல்லாமை, சீரற்ற காலநிலை மற்றும் கனரக இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களைப் புகையிரதங்கள் மூலமே கொண்டு செல்ல வேண்டியிருந்தமை போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே இச்சீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி பிற்பகல் முதல் கொழும்பு கோட்டை - பேராதனை / கம்பளை இடையிலான வழக்கமான புகையிரதச் சேவைகள் திருத்தப்பட்ட நேர அட்டவணையின் கீழ் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

காலநிலை நீதி, காசா நிவாரணம், கடன் சீர்திருத்தம்: ஐ.நா.வில் இலங்கை கோரிக்கை!

...

arvoshan.com

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

...

arvoshan.com

தியாக தீபத்தின் சிலை அகற்றம்: வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

...

arvoshan.com

மல்வத்தையில் இரு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

...

arvoshan.com

சசீந்திர ராஜபக்‌ஷ மீதான ஊழல் வழக்கு கட்டளை அக்டோபர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

இலங்கை கடற்றொழில் துறையை நவீனமயமாக்க ரஷ்ய முதலீடு கோரிக்கை

...

arvoshan.com

நீதிமன்ற டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் குறித்து பிரேசில் தூதுவரிடம் நீதி அமைச்சர் தெளிவுரை!

...

arvoshan.com

சூரிய சக்தி மின் உற்பத்தித் துறையை அரசாங்கம் சீரழிக்கின்றது:சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

...

arvoshan.com

பத்தேகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர்கள் மூவர் கைது

...

arvoshan.com

எரிபொருள் தாங்கி ஊர்தியாளர்கள் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

மாத்தறையில் யானைத் தந்த ஆபரணங்களுடன் இருவர் கைது

...

arvoshan.com

வருமான வரி செலுத்த மேலும் இரு நாட்களே அவகாசம்!

...

arvoshan.com

கதிர்காமம் – புத்தள வீதியில் யானைகளுக்கு உணவளிக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

...

arvoshan.com

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ நான்காம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டார்!

...

arvoshan.com

மீகொட, நொச்சியாகம, வாத்துவயில் கொடூர விபத்துகள்: மூவர் பலி

...