புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு வாரம் தினமும் 6 காட்சிகள் – முதல்வர் விஜய் உத்தரவு!

arvloshan.com

தமிழகத்தில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு தினமும் அதிகபட்சமாக ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை நடைமுறையில் இருந்த நான்கு மற்றும் ஐந்து காட்சிகள் என்ற வரம்பு தற்போது ஆறு காட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் பிலிம் ஆக்டிவ் புரொட்யூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை திரைப்படத் துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்திருந்தன.

குறிப்பாக, புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வார காலத்துக்கு தினமும் ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை இந்தக் காட்சிகளைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

1957ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளின்படி, திரையரங்குகளில் தினமும் நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பின்னர் வெளியிடப்படும் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு, வெளியான நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திரைப்படத் துறையினரின் கோரிக்கைகளைப் பரிசீலித்த முதல்வர் விஜய், திரையரங்குகள் தொடர்பான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உத்தேசித்து புதிய அனுமதியை வழங்கியுள்ளார்.

இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வார காலத்துக்கு தினமும் அதிகபட்சமாக ஆறு காட்சிகள் திரையிடலாம். மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினமும் ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிகள் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை திரையிடப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 5 யூடியூபர்கள் யார்? மாத வருமானம் பல கோடிகளாம்!

...

arvoshan.com

தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைத்த ‘ஜெயிலர் 2’: ரூ.800 கோடியைக் கடந்த வசூல்!

...

arvoshan.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் இணையும் நடிகர் பார்த்திபன்!

...

arvoshan.com

‘ஓம்’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த தனுஷுக்கு சூர்யா நன்றி!

...

arvoshan.com

குற்றப் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படத்தில் பிரேம்ஜி அமரன்!

...

arvoshan.com

ஷாருக்கானின் ‘King’ திரைப்படம் – வெளிநாட்டு விநியோக உரிமை ரூ.175 கோடிக்கு விற்பனை!

...

arvoshan.com

பழங்குடி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் ‘அரிகொம்பன்’ திரைப்படம்

...

arvoshan.com

15 நாட்களில் ரூ.765 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ புதிய சாதனை!!

...

arvoshan.com

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராகக் களமிறங்கும் மித்துன் மாணிக்கம் – ‘ஃபேமிலி பாய்’ டிசம்பர் 11இல் வெளியீடு

...

arvoshan.com

உண்மை தெரியாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது! – சுந்தர்.சி

...

arvoshan.com

‘ஸ்டார் ட்ரெக்’ புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

...

arvoshan.com

ஏ.ஐ. மூலம் போலி வீடியோ: நடிகை சுனைனா கடும் கண்டனம்

...

arvoshan.com

‘தத் த்வம் அஸி’ படத்தின் தலைப்பு ‘மணிகண்டா’ என மாற்றம்!

...

arvoshan.com

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ‘தர்மன்’ – ரஜினிகாந்துடன் மீண்டும் இணையும் நயன்தாரா!

...

arvoshan.com

கோவையில் நடிகை த்ரிஷாவின் ரோடு ஷோ – ரசிகர்கள் கூட்டம் அலைமோதல்!

...