சசீந்திர ராஜபக்‌ஷ மீதான ஊழல் வழக்கு கட்டளை அக்டோபர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

arvloshan.com

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கில், பிரதிவாதிகள் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முதற்கட்ட ஆட்சேபனைகள் மீதான தீர்மானத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்‌ஷ, இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பணிப்பாளர் சேபாலிகா சமன்குமாரி மற்றும் மகாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பண்டார கொத்தகம ஆகிய மூவர் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைக்கு எதிராக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் முதற்கட்ட ஆட்சேபனைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்குப் பதிலளித்து ஆணைக்குழுவின் சார்பில் உதவிப் பணிப்பாளர் நாயகம் சுபாஷினி சிரிவர்தன தமக்குரிய வாதங்களை முன்வைத்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளின் போது, செவனகல பகுதியில் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கட்டிடமும் ஏனைய சொத்துக்களும் சேதமடைந்திருந்தன.

குறித்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவது உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும், பிரதிவாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இழப்பீட்டு அலுவலகத்தின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 8.85 மில்லியன் ரூபாயை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்தமை மற்றும் அதற்குத் உடந்தையாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

காலநிலை நீதி, காசா நிவாரணம், கடன் சீர்திருத்தம்: ஐ.நா.வில் இலங்கை கோரிக்கை!

...

arvoshan.com

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

...

arvoshan.com

பேராதனை - கம்பளை இடையிலான புகையிரத சேவை ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

...

arvoshan.com

தியாக தீபத்தின் சிலை அகற்றம்: வடகிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

...

arvoshan.com

மல்வத்தையில் இரு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

...

arvoshan.com

இலங்கை கடற்றொழில் துறையை நவீனமயமாக்க ரஷ்ய முதலீடு கோரிக்கை

...

arvoshan.com

நீதிமன்ற டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் குறித்து பிரேசில் தூதுவரிடம் நீதி அமைச்சர் தெளிவுரை!

...

arvoshan.com

சூரிய சக்தி மின் உற்பத்தித் துறையை அரசாங்கம் சீரழிக்கின்றது:சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

...

arvoshan.com

பத்தேகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர்கள் மூவர் கைது

...

arvoshan.com

எரிபொருள் தாங்கி ஊர்தியாளர்கள் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

மாத்தறையில் யானைத் தந்த ஆபரணங்களுடன் இருவர் கைது

...

arvoshan.com

வருமான வரி செலுத்த மேலும் இரு நாட்களே அவகாசம்!

...

arvoshan.com

கதிர்காமம் – புத்தள வீதியில் யானைகளுக்கு உணவளிக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

...

arvoshan.com

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ நான்காம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டார்!

...

arvoshan.com

மீகொட, நொச்சியாகம, வாத்துவயில் கொடூர விபத்துகள்: மூவர் பலி

...