டொனால்ட் ட்ரம்பின் சிறுவயது வீடு 1.93 மில்லியன் டொலருக்கு விற்பனை!

arvloshan.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சிறுவயதில் வசித்த, நியூயோர்க் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் 2 மில்லியன் டொலருக்கும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அசோசியேட்டட் பிரஸ் மற்றும் நியூயோர்க் போஸ்ட் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கைகளின்படி, குவீன்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு 1.93 மில்லியன் டொலருக்குக் கைமாறியுள்ளது.

வரலாற்றுப் பின்னணியும் கட்டிடக்கலையும்

நியூயோர்க்கின் குவீன்ஸ் பகுதியில் உள்ள ஜமைக்கா எஸ்டேட்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த டியூடார் பாணியிலான ஆடம்பர இல்லத்தை, 1940ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்பின் தந்தையும் பிரபல நில உடமை வணிகருமான ஃபிரெட் ட்ரம்ப் கட்டியெழுப்பினார். டொனால்ட் ட்ரம்ப் தனது வாழ்நாளின் முதல் நான்கு ஆண்டுகள் வரை இந்த வீட்டில்தான் வசித்து வந்தார்.

இதற்கு முன்னர், டரம்ப் முதன்முதலில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் பதவியேற்ற காலப்பகுதியில், அதாவது 2017ஆம் ஆண்டில் இவ்வ வீடு 2.14 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான ஏர்பிபி வாடகை இல்லமாகவும் இது சிறிது காலம் செயற்பட்டது.

பாழடைந்த நிலையில் இருந்து பிரம்மாண்ட மறுசீரமைப்பு

கடந்த ஆண்டு, டாமி லின் என்ற நில உடமை மேம்பாட்டாளர் ஐந்து படுக்கையறைகள் மற்றும் மூன்று குளியலறைகளைக் கொண்ட இந்த வீட்டை வெறும் 835,000 டொலருக்கு வாங்கினார். எனினும், அதற்கு முன்னர் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி இந்த இல்லம் வெறிச்சோடிக்கிடந்துள்ளது.

இதுகுறித்து 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகைக்குப் பேட்டியளித்த லின், வீட்டின் மோசமான நிலை குறித்து விளக்கியிருந்தார்:

"இந்த வீட்டில் மின்சாரமோ அல்லது நீர்த் தேவையோ பூர்த்தி செய்யப்படவில்லை. அடித்தளத்தில் நீர்க்குழாய் வெடித்துச் சேதமடைந்திருந்ததுடன், கூரை முழுவதும் பூஞ்சை படர்ந்திருந்தது. மனிதர்கள் எவரும் வசிக்க முடியாதவாறே இந்த இல்லம் காணப்பட்டது" என்றார் அவர்.

நவீன வசதிகளுடன் கூடிய புதுப்பிப்பு

இதனையடுத்து, சுமார் எட்டு மாத காலப்பகுதிக்குள் 500,000 டொலர் செலவிட்டு இந்த வீட்டை லின் முற்றிலுமாகப் புதுப்பித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட இந்த இல்லத்தில், சமையற்கலை நிபுணர்களுக்கான நவீன சமையலறை , ஹெரிங்போன் வகைத் மரத் தளங்கள் மற்றும் ஸ்பா (Spa) போன்ற பிரம்மாண்டமான குளியலறைகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் பெயர் வெளியிடப்படாத ஒரு கொள்வனவு வாடிக்கையாளருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக, இந்த விற்பனை நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொங்கோ பாடசாலையில் ஏற்பட்ட கோரத் தீ விபத்து: 26 பேர் பரிதாபப் பலி!

...

arvoshan.com

லிபியாவில் விமான விபத்து: மூவர் உயர்தப்பினர்

...

arvoshan.com

துருக்கியில் பாலியல் சிறுபான்மையினர் அமைப்புகள் மீது அதிரடி சோதனை: 60-க்கும் மேற்பட்டோர் கைது!

...

arvoshan.com

இந்தோனேஷிய கப்பல் விபத்து: 6 பேர் பலி; 129 பேரைக் காணவில்லை

...

arvoshan.com

சிலியில் சோகம்: முதியோர் இல்லத் தீ விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

...

arvoshan.com

தென்னாபிரிக்காவில் கொடூர வீதி விபத்து: 21 பேர் பரிதாபமாக பலி

...

arvoshan.com

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட கங்கை ஆரத்தி விழா!

...

arvoshan.com

சவூதி, ஹோர்முஸ் தாக்குதல்கள்: கச்சா எண்ணெய் விலை 3 டாலருக்கும் அதிகமாக திடீர் உயர்வு!

...

arvoshan.com

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை

...

arvoshan.com

பிலிப்பைன்ஸ் படகு விபத்து: பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்வு; 13 பேரைக் காணவில்லை

...

arvoshan.com

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த பிரிக்ஸ் (BRICS) நாடுகள் முன்வர வேண்டும்: சீன அதிபர் ஜி ஜின்பிங்

...

arvoshan.com

73 சிவிலியன்கள் காயமடைந்த ஹூதி தாக்குதல்களுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம்

...

arvoshan.com

பிலிப்பைன்ஸ் படகுத் தீ விபத்து: பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

...

arvoshan.com

சுவிட்சர்லாந்தில் பேருந்து விபத்து: 5 பேர் பலி; 40 பேர் காயம்

...

arvoshan.com

89 வருட ஓவியத்தில் ‘ஸ்மார்ட்போன்’? சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய ‘காலப் பயணம்’ சர்ச்சை!

...