கொங்கோ பாடசாலையில் ஏற்பட்ட கோரத் தீ விபத்து: 26 பேர் பரிதாபப் பலி!

arvloshan.com

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற அதிபயங்கர தீ விபத்தில், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெற்கு கிவு மாகாணத்தின் புகாவு நகரில் அமைந்துள்ள சிம்பண்டா பிரதேசத்தில் இயங்கிவரும் குறித்த பாடசாலையிலேயே கடந்த வியாழக்கிழமை காலை 9 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

வழமை போல் கல்விச் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரெனக் கட்டடத்தில் தீப் பரவத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்டதும் பாடசாலைச் சமூகத்தினரிடையே பெரும் பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்ததும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் , நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆயினும், இந்தத் தீ விபத்தில் சிக்கி 19 மாணவியரும், 4 மாணவர்களும் உட்பட மொத்தம் 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இச்சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு அரச அதிகாரிகள் மற்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து, இத்துயர விபத்துக்கான மூலக் காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

லிபியாவில் விமான விபத்து: மூவர் உயர்தப்பினர்

...

arvoshan.com

டொனால்ட் ட்ரம்பின் சிறுவயது வீடு 1.93 மில்லியன் டொலருக்கு விற்பனை!

...

arvoshan.com

துருக்கியில் பாலியல் சிறுபான்மையினர் அமைப்புகள் மீது அதிரடி சோதனை: 60-க்கும் மேற்பட்டோர் கைது!

...

arvoshan.com

இந்தோனேஷிய கப்பல் விபத்து: 6 பேர் பலி; 129 பேரைக் காணவில்லை

...

arvoshan.com

சிலியில் சோகம்: முதியோர் இல்லத் தீ விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

...

arvoshan.com

தென்னாபிரிக்காவில் கொடூர வீதி விபத்து: 21 பேர் பரிதாபமாக பலி

...

arvoshan.com

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட கங்கை ஆரத்தி விழா!

...

arvoshan.com

சவூதி, ஹோர்முஸ் தாக்குதல்கள்: கச்சா எண்ணெய் விலை 3 டாலருக்கும் அதிகமாக திடீர் உயர்வு!

...

arvoshan.com

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை

...

arvoshan.com

பிலிப்பைன்ஸ் படகு விபத்து: பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்வு; 13 பேரைக் காணவில்லை

...

arvoshan.com

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த பிரிக்ஸ் (BRICS) நாடுகள் முன்வர வேண்டும்: சீன அதிபர் ஜி ஜின்பிங்

...

arvoshan.com

73 சிவிலியன்கள் காயமடைந்த ஹூதி தாக்குதல்களுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம்

...

arvoshan.com

பிலிப்பைன்ஸ் படகுத் தீ விபத்து: பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

...

arvoshan.com

சுவிட்சர்லாந்தில் பேருந்து விபத்து: 5 பேர் பலி; 40 பேர் காயம்

...

arvoshan.com

89 வருட ஓவியத்தில் ‘ஸ்மார்ட்போன்’? சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய ‘காலப் பயணம்’ சர்ச்சை!

...