136 கிலோ ஹெரோயின் கடத்தல்: தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை

arvloshan.com

ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, தெஹிவளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி சிலாபம், ஆனைவிலுந்தாவ பகுதியில் சிலாபம் பிரிவு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சோதனையின்போது பொலிஸாரால் 211 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால்  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அதில் 136 கிலோகிராம் 99 கிராம் தூய ஹெரோயின் அடங்கியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாக இது பதிவாகியிருந்ததுடன், இதன் சந்தைப் பெறுமதி சுமார் 100 கோடி ரூபா எனக் கணக்கிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

அனோஜனின் குடும்பத்தை சந்தித்தார் ரிசாத் பதியுதீன்: சவூதி மன்னருக்கு கூட்டு மேன்முறையீடு செய்ய தீர்மானம்

...

arvoshan.com

அனோஜன் விடுதலை: கட்சித் தலைவர்களின் கூட்டுக் கோரிக்கைக்கு கஜேந்திரகுமார் வலியுறுத்து

...

arvoshan.com

சமூக வலைத்தள போதைப்பொருள் காணொளி: 11 வயது சிறுவன் பொலிஸ் பாதுகாப்பில்

...

arvoshan.com

‘எனது வாகனம், எனது எரிபொருள்’ என பொது வீதியில் கூற முடியாது: அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

...

arvoshan.com

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிட சவூதி அரேபியாவிடம் அலி சப்ரி கோரிக்கை!

...

arvoshan.com

சுரேஷ் சாலேயின் மனு மீதான தீர்மானம் நவம்பர் 27 இல் அறிவிப்பு!

...

arvoshan.com

வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் சேவை வழங்கிய ரயில்வே ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் பாராட்டு!

...

arvoshan.com

விமல் வீரவன்சவின் உரை நீதிமன்ற அவமதிப்பா? விசாரணைக்கு உத்தரவு!

...

arvoshan.com

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வழக்கு: இலங்கை வெளிவிவகார அமைச்சு விளக்கம்

...

arvoshan.com

போலி லேபிள் பழச்சாறு விநியோகம்: வத்தளை நபருக்கு ரூ. 42,000 அபராதம்

...

arvoshan.com

உள்நாட்டு மிதக்கும் சூரியமின் நிலையம் திறப்பு: ஆண்டிற்கு $3 மில்லியன் சேமிப்பு!

...

arvoshan.com

வங்காள விரிகுடாவில் புயல் சின்னம்: ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு எச்சரிக்கை!

...

arvoshan.com

அதிவேகப் பாதைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: இன்று நள்ளிரவு முதல் அமல்!

...

arvoshan.com

கடலில் தவறி விழுந்த துறைமுக வழிகாட்டி இலங்கை கடற்படையினரால் மீட்பு

...

arvoshan.com

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மேம்பாட்டிற்கு 336 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

...