விமல் வீரவன்சவின் உரை நீதிமன்ற அவமதிப்பா? விசாரணைக்கு உத்தரவு!

arvloshan.com

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியொன்றில் உரையாற்றிய விமல் வீரவன்ச, வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையையடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, விமல் வீரவன்சவின் உரைகள் அடங்கிய குறுந்தகட்டினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், இது குறித்து பரிசீலித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த பிரதான நீதிவான், குறித்த கருத்து நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட முடியுமா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

அனோஜனின் குடும்பத்தை சந்தித்தார் ரிசாத் பதியுதீன்: சவூதி மன்னருக்கு கூட்டு மேன்முறையீடு செய்ய தீர்மானம்

...

arvoshan.com

அனோஜன் விடுதலை: கட்சித் தலைவர்களின் கூட்டுக் கோரிக்கைக்கு கஜேந்திரகுமார் வலியுறுத்து

...

arvoshan.com

சமூக வலைத்தள போதைப்பொருள் காணொளி: 11 வயது சிறுவன் பொலிஸ் பாதுகாப்பில்

...

arvoshan.com

‘எனது வாகனம், எனது எரிபொருள்’ என பொது வீதியில் கூற முடியாது: அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

...

arvoshan.com

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிட சவூதி அரேபியாவிடம் அலி சப்ரி கோரிக்கை!

...

arvoshan.com

சுரேஷ் சாலேயின் மனு மீதான தீர்மானம் நவம்பர் 27 இல் அறிவிப்பு!

...

arvoshan.com

வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் சேவை வழங்கிய ரயில்வே ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் பாராட்டு!

...

arvoshan.com

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வழக்கு: இலங்கை வெளிவிவகார அமைச்சு விளக்கம்

...

arvoshan.com

போலி லேபிள் பழச்சாறு விநியோகம்: வத்தளை நபருக்கு ரூ. 42,000 அபராதம்

...

arvoshan.com

உள்நாட்டு மிதக்கும் சூரியமின் நிலையம் திறப்பு: ஆண்டிற்கு $3 மில்லியன் சேமிப்பு!

...

arvoshan.com

வங்காள விரிகுடாவில் புயல் சின்னம்: ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு எச்சரிக்கை!

...

arvoshan.com

அதிவேகப் பாதைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: இன்று நள்ளிரவு முதல் அமல்!

...

arvoshan.com

கடலில் தவறி விழுந்த துறைமுக வழிகாட்டி இலங்கை கடற்படையினரால் மீட்பு

...

arvoshan.com

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மேம்பாட்டிற்கு 336 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

...

arvoshan.com

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மகனை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் தாயார் கோரிக்கை

...