மண்சரிவு அபாயம்: பல மாவட்டங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன எச்சரிக்கை

arvloshan.com

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல மாவட்டங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

இன்று (22) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (23) பிற்பகல் 4.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த மண்சரிவு அபாய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை (நிலை 3 - உடனடியாக வெளியேறவும்)

கண்டி மாவட்டத்தின் பாஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவை, நோர்வுட் , கொத்மலை மேற்கு மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பகுதிகளுக்கும் மிக உயர்ந்த அபாய அளவான 'நிலை 3' சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அம்பர் நிற எச்சரிக்கை (நிலை 2 - விழிப்புடன் இருக்கவும்)

கொழும்பு மாவட்டத்தின் படுகா; காலி மாவட்டத்தின் தவலம , நாகொட மற்றும் நெலுவ; களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட; கண்டி மாவட்டத்தின் உடபலாத மற்றும் கங்கா இஹல கோரளை ; கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை , யட்டியாந்தோட்டை, மாவநல்லை, தெஹிஓவிட்டை (Dehiowita) மற்றும் அரநாயக; நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு 'நிலை 2' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை (நிலை 1 - அவதானத்துடன் இருக்கவும்)

கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை; கம்பஹா மாவட்டத்தின் மீரிகம மற்றும் அத்தனகல்ல; காலி மாவட்டத்தின் நியாகம மற்றும் பத்தேகம ; களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை , பாலின்தநுவர, புலத்சிங்கள மற்றும் இங்கிரிய ; கண்டி மாவட்டத்தின் பாததும்பர, யடினுவர, தொலுவை மற்றும் உடுனுவர; கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல , கேகாலை, காலிகமுவை , புலத்கோஹுபிட்டிய மற்றும் ருவன்வெல்லை; குருணாகல் மாவட்டத்தின் அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல மற்றும் மல்லவப்பிட்டிய; மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, அக்குரஸ்ஸ, அத்துரலிய மற்றும் பிட்டபெத்தர ; இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை, எலப்பாத, ஆயகம, பெல்மடுல்லை , நிவித்திகலை மற்றும் குருவிட்டை ஆகிய பகுதிகளுக்கு 'நிலை 1' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், இடர் மேலாண்மைப் பிரிவு மற்றும் பிரதேச அதிகாரிகளால் வழங்கப்படும் வழிகாட்டல்களைத் தவறாது பின்பற்றுமாறும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளின் பெயர்கள்

...

arvoshan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 15 பேருக்கு தலா 200 ஆண்டுகளுக்கும் அதிகமான கடுங்காவல் சிறை!

...

arvoshan.com

6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்களின் சொத்துக்களை முடக்கியது மத்திய வங்கி

...

arvoshan.com

சுரேஷ் சல்லேவுக்கு 40 இலட்சம் ரூபாயில் இதயச் சாதனம்: நீதிமன்றில் தகவல்

...

arvoshan.com

முன்னாள் அம்பாறை வைத்தியசாலை பணிப்பாளரின் மரணம்: சிகிச்சையில் கவனக்குறைவு இருந்ததா? – வெளியானது அதிர்ச்சித் தகவல்கள்!

...

arvoshan.com

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான மூளையாகச் செயற்பட்டவர் நௌஃபர் மௌலவியே: நீதிமன்றம் உத்தியோகபூர்வமாகத் தீர்ப்பு!

...

arvoshan.com

கால அவகாசம் கோரிய பொலிஸார்: மண்டைதீவு புதைகுழி வழக்கு நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

...

arvoshan.com

சுகாதார சீர்கேடு. திருநெல்வேலியில் பிரபல வெதுப்பகம் சீல் வைப்பு. 36,000/= தண்டம்...

...

arvoshan.com

மின்தொடர் திட்டத்திற்கு அதிக மின்சாரம் தேவை: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

...

arvoshan.com

அதிவேகப் பாதைகளில் சிறுவர்களுக்கு இருக்கைப் பட்டி கட்டாயமில்லை: பொலிஸ் அறிவிப்பு

...

arvoshan.com

ஷேக் அகமது பின் ரஷீத்தின் மறைவுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அனுதாபம்

...

arvoshan.com

இஸ்ரேலின் கட்டுமானப் பணிகளுக்காக 133 இலங்கைத் தொழிலாளர்கள் நாளை பயணம்

...

arvoshan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

...

arvoshan.com

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை ரத்து செய்யப்படவில்லை: பிரதி நிதி அமைச்சர்

...

arvoshan.com

விமான எரிபொருள் திட்ட ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு: அமைச்சரவை ஒப்புதல்

...