உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளின் பெயர்கள்
இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கு தலா 200 ஆண்டுகளுக்கும் அதிகமான கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட 15 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றினால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள்:
முஹம்மது இப்ராஹிம் முஹம்மது நெளபர் - என அழைக்கப்படும் நெளபர் மௌலவி (Naufar Mawlavi)
முஹம்மது சரீபு அதம் லெப்பை - என அழைக்கப்படும் கபூர் மாமா (Gafoor Mama)
ஹயாத்து முஹம்மது அகமது மில்ஹான் (Hayathu Mohamed Ahmed Milhan)
முஹம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (Mohamed Ibrahim Sadiq Abdullah)
முஹம்மது இப்ராஹிம் ஹாஃபிஸ் அப்துல் ஹக் (Mohamed Ibrahim Hafiz Abdul Haq)
முஹம்மது அன்வர் முஹம்மது ரிஸ்கான் (Mohamed Anwar Mohamed Rizkan)
முஹம்மது மன்சூர் முஹம்மது சனாஸ்தீன் (Mohamed Mansoor Mohamed Sanasdeen)
அப்துல் மனாஃப் முஹம்மது பிர்தெளஸ் (Abdul Manaf Mohamed Firdous)
முஹம்மது ரமீஸ் முஹம்மது சாஜித் (Mohamed Rameez Mohamed Saajith)
அப்துல் லத்தீஃப் முஹம்மது சாஃபி (Abdul Latheef Mohamed Safi)
ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர் (Husainul Rizvi Khalid Sameer)
முஹம்மது ஹனீஃபா ஜைனுல் ஆப்தீன் (Mohamed Hanifa Zainul Abdeen)
முஹம்மது முஸ்தபா முஹம்மது ஹாரிஸ் (Mohamed Mustafa Mohamed Haris)
ரஸீக் ரஸா ஹுஸைன் (Razik Raza Hussain)
கச்சி முஹம்மது முஹம்மது ஜெம்ஸீத் (Kachchi Mohamed Mohamed Jemsith)
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூரத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.