கால அவகாசம் கோரிய பொலிஸார்: மண்டைதீவு புதைகுழி வழக்கு நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

arvloshan.com

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று (22.09.2026) செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸார் சார்பில் சான்றுகள் சில நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் தேவையாக உள்ளதாக பொலிஸாரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதி தொடர்பான சான்றுகள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை முழுமையாக ஆய்வு செய்து திரட்டி சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது. எனினும், இன்றைய விசாரணையின்போதும் பொலிஸார் தரப்பில் மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்னபெலினா, காணாமல்போன ஆட்களைப்பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த. செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

மண்டைதீவு சம்பவத்தில் தனது மகனை இழந்ததாகத் தெரிவிக்கும் 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு முதன்முறையாக 2025 செப்டெம்பர் 17 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மேலதிக சாட்சியங்களையும் தடயங்களையும் திரட்டுவதற்கு பொலிஸார் தொடர்ந்து கால அவகாசம் கோரி வருவதனால், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாமல் இழுபறி நிலையில் உள்ள மண்டைதீவு புதைகுழி விவகாரத்தின் நீதித்துறை சார்ந்த விசாரணைகள் மேலும் தாமதமடைவது பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளின் பெயர்கள்

...

arvoshan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 15 பேருக்கு தலா 200 ஆண்டுகளுக்கும் அதிகமான கடுங்காவல் சிறை!

...

arvoshan.com

6 நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்களின் சொத்துக்களை முடக்கியது மத்திய வங்கி

...

arvoshan.com

சுரேஷ் சல்லேவுக்கு 40 இலட்சம் ரூபாயில் இதயச் சாதனம்: நீதிமன்றில் தகவல்

...

arvoshan.com

முன்னாள் அம்பாறை வைத்தியசாலை பணிப்பாளரின் மரணம்: சிகிச்சையில் கவனக்குறைவு இருந்ததா? – வெளியானது அதிர்ச்சித் தகவல்கள்!

...

arvoshan.com

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான மூளையாகச் செயற்பட்டவர் நௌஃபர் மௌலவியே: நீதிமன்றம் உத்தியோகபூர்வமாகத் தீர்ப்பு!

...

arvoshan.com

சுகாதார சீர்கேடு. திருநெல்வேலியில் பிரபல வெதுப்பகம் சீல் வைப்பு. 36,000/= தண்டம்...

...

arvoshan.com

மின்தொடர் திட்டத்திற்கு அதிக மின்சாரம் தேவை: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

...

arvoshan.com

அதிவேகப் பாதைகளில் சிறுவர்களுக்கு இருக்கைப் பட்டி கட்டாயமில்லை: பொலிஸ் அறிவிப்பு

...

arvoshan.com

ஷேக் அகமது பின் ரஷீத்தின் மறைவுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அனுதாபம்

...

arvoshan.com

இஸ்ரேலின் கட்டுமானப் பணிகளுக்காக 133 இலங்கைத் தொழிலாளர்கள் நாளை பயணம்

...

arvoshan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

...

arvoshan.com

மண்சரிவு அபாயம்: பல மாவட்டங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன எச்சரிக்கை

...

arvoshan.com

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை ரத்து செய்யப்படவில்லை: பிரதி நிதி அமைச்சர்

...

arvoshan.com

விமான எரிபொருள் திட்ட ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு: அமைச்சரவை ஒப்புதல்

...